கோபி கன்னத்தில் ஓங்கி ஒன்னு விட்ட ராதிகா.! அதிர்ச்சியில் உறைந்த கோபி.! பாக்கியலட்சுமி ப்ரோமோ

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கோபியை அடித்து இருப்பது போன்ற ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் பாக்கியலட்சுமி தொடர், மக்களின் மனம் கவர்ந்த தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. பல தடைகளை மீறி கோபி தனது முதல் மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து இருக்கிறார். திருமணம் ஆனது முதல் கோபிக்கும் ராதிகாவிற்கும் ஏதாவது பிரச்சனை எழுந்து வருகிறது. ராதிகா சமைப்பது கிடையாது, காபி கூட போடுவது கிடையாது. இதனால் மனம் நொந்து போய் இருக்கிறார் கோபி. பாக்யாவுடன் வாழ்ந்த போது நேரத்துக்கு சாப்பாடு, காபி என்றெல்லாம் வாழ்ந்த கோபி, ராதிகாவை திருமணம் செய்த பின்பு படாத பாடு பட்டு வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

கோபி கன்னத்தில் ஓங்கி ஒன்னு விட்ட ராதிகா.! அதிர்ச்சியில் உறைந்த கோபி.! பாக்கியலட்சுமி ப்ரோமோ 1

விளம்பரம்

இந்த நிலையில் அவரது மூத்த மகன் செழியனின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் .இந்த விஷயத்தை கோபியின் அப்பா ராமமூர்த்தி ஊருக்கெல்லாம் சொல்லி வருகிறார். மேலும் நேற்று ராதிகாவின் வீட்டிற்கு வந்த கோபியின் அப்பா ராமமூர்த்தி கோபியை பார்த்து நீ தாத்தா ஆகிட்ட என்று கலாய்க்கிறார். மேலும் ராதிகாவையும் அவர் கலாய்த்து விட்டு சென்றார். இதனால் கடுப்பான ராதிகா கோபி மீது கோபம் கொள்கிறார். உங்களை திருமணம் செய்ததே தவறு என்று கோபி மீது கடுப்பில் இருக்கிறார். பின்னர் கோபி ஏதோ பேசுவதற்கு முயற்சி செய்யும்போது அவர் பேசுவதை கேட்காமல் அங்கிருந்து விலகிச் சென்று கதவை சாத்தி விடுகிறார். அப்போது கோபி தனியாக புலம்பி கொண்டிருக்க, கதவை திறந்து உள்ளே இருந்து பொம்மையை தூக்கி அவர் முகத்தில் எறிகிறார்.

தொடர்புடையவை  கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் நாயகி சீரியலின் நாயகி வித்யா பிரதீப்..!

கோபி கன்னத்தில் ஓங்கி ஒன்னு விட்ட ராதிகா.! அதிர்ச்சியில் உறைந்த கோபி.! பாக்கியலட்சுமி ப்ரோமோ 3

விளம்பரம்

அந்தப் ப்ரோமோ தற்போது வெளியாக இருக்கிறது. இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பாக்கியவிடம் எவ்வளவு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தீர்கள்? இப்பொழுது இங்கு வந்து அடி கூட வாங்குகிறீர்கள். நன்றாக அனுபவியுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! Watch the below video..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment