பழனிச்சாமியால் பாக்யாவுக்கு நடக்க இருந்த நல்ல விஷயம்.! ஆனால் கடைசியில இப்படி ஆயிடுச்சே.!

வெளியிட்டது

‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாக்யாவிற்கு கேன்டீன் காண்ட்ராக்ட் கிடைக்காமல் தடுமாறி வருகிறார். அதற்கு பழனிச்சாமி சில உதவிகளை செய்ய முன் வந்துள்ளார். ஆனாலும் அதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளது. விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ தொடர் பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. தனது கணவரின் இரண்டாவது திருமணத்தால் பாதிக்கப்பட்டிருந்த பாக்யா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தனது மூத்த மகன் செழியனுக்கும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்து மனமடைந்து போகிறார். செழியனின் மனைவி ஜெனி குழந்தையை தூக்கிக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பழனிச்சாமியால் பாக்யாவுக்கு நடக்க இருந்த நல்ல விஷயம்.! ஆனால் கடைசியில இப்படி ஆயிடுச்சே.! 1
நிலைமை இப்படி இருக்க பாக்யா பொருட்காட்சி ஒன்றில் கேண்டீன் ஆர்டர் எடுப்பதற்காக அலைந்து கொண்டிருக்கிறார். ஆனால் அந்த காண்ட்ராக்ட்டை எடுப்பதற்கு ரூ.10 லட்சம் வேண்டும் என்று சொல்லி பாக்யாவை அனுப்பி விடுகின்றனர். பணம் இல்லாததால் ஆர்டர் எடுக்கும் முடிவை கைவிடுகிறார். தற்போது பாக்யாவின் தோழராக இருக்கும் பழனிச்சாமி பாக்யாவை அழைத்துக் கொண்டு செல்கிறார். அவர் பாக்யாவிடம் நீங்கள் எடுக்க விரும்பிய கான்ட்ராக்ட்டை வேறு ஒருவர் எடுத்திருந்தார் அல்லவா? அவர் தற்போது அதை கைமாற்றி விட நினைக்கிறார் என்று கூறி அவர்களிடம் பாக்யாவை அழைத்துச் செல்கிறார். 10 லட்சம் கொடுத்து கான்ட்ராக்ட் எடுத்த அவர்கள், இரண்டு லட்சம் கொடுத்தால் போதும் இந்த காண்ட்ராக்டை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.


இங்கு மாலைக்குள் நீங்கள் பணம் கொடுத்தால் உங்களுக்கு அந்த காண்ட்ராக்ட்டை தருகிறோம் இல்லை என்றால் வேறு யாருக்காகவது அந்த காண்ட்ராக்டை கொடுத்து விடுவோம் என்று கூறிவிட்டு செல்கின்றனர். இதனால் பாக்யா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார். நீங்களும் தற்போது வெளியாகிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்