Categories: சினிமா

பகை முடிக்க வருகிறான் பகாசூரன்.! செல்வராகவன் தெறி நடிப்பில் அதிரடியாக வெளியானது ட்ரைலர்.!

வெளியிட்டது

திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜியின் அடுத்த இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது பகாசூரன் திரைப்படம். இந்த திரைப்படத்திலிருந்து சமீபத்தில் டீசர் வெளியாகிய நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. சர்ச்சைக்குப் பெயர் போன இயக்குனராக இருப்பவர் மோகன் ஜி. இவர் ஏற்கனவே பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி ருத்ரதாண்டவம், போன்ற படங்களை இயக்கியிருந்தார். இவர் இலக்கிய படங்கள் அனைத்துமே ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி வந்தது. குறிப்பிட்ட சாதியை எதிர்க்கும் விதமாக இவரது படங்கள் இருப்பதாக விமர்சனங்களும் எழுந்தன. நாடக காதல் பற்றி இவர் தனது படங்களில் மறைமுகமாக விமர்சித்து இருப்பார். இதனால் பலரும் மோகன் ஜியின் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது வழக்கமாக இருக்கிறது. ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பகை முடிக்க வருகிறான் பகாசூரன்.! செல்வராகவன் தெறி நடிப்பில் அதிரடியாக வெளியானது ட்ரைலர்.! 1

ஆனாலும் இவரது படங்கள், வசூலை வாரி குவித்து விடுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் தற்போது இவர் புதிதாக இயக்கி வரும் படம் தான் பகாசூரன். இந்த படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ஜி.எம் ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்திருக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிந்து படம் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து டீசர், முதல் சிங்கிள் பாடல்கள் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என்று மோகன் ஜி அறிவித்து இருந்தார்.


சமூகத்தில் நடக்கும் ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வுகளை மையமாகக் கொண்டு படத்தை எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள மோகன் ஜி, இந்த படத்தை பள்ளிக்கூடங்களில் நடக்கும் காதல்களைப் பற்றியும், மொபைல் ஃபோன்களால் பள்ளி சிறுவர்கள் எவ்வாறு சீரழிகின்றனர்? வீடியோ கால்கள் மூலமாக எவ்வாறு சமூகத்தில் அவலங்கள் நடக்கிறது என்பதை எடுத்துக் கூறியிருக்கிறார். தற்போது படத்தில் இருந்து ட்ரைலர் வீடியோ வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ட்ரெய்லரை காண.! Watch the below video..!

YouTube Video Code Embed Credits: MRT Music

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்