தாமரை பொம்மையை வீசி எறிந்த நிரூப்..கடுப்பாகி திட்டிய சினேகன் | BiggBoss Ultimate Feb21 Promo 1

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தொடங்கப்பட்டதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவித நிகழ்ச்சி. எப்பொழுதும் பிக்பாஸ் ஆரம்பிக்கிறது என்றாலே யார் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள்? என்ற ஆவல் மக்களிடையே தொற்றிக் கொள்ளும். அதற்கேற்ப இணையங்களில் வதந்திகள் றெக்கை கட்டி பறக்கும். ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் சற்று வித்தியாசமானது. என்னவென்றால் கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து 70 நாட்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுதான். இது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பு ஆகும் என்பதால் பிக்பாஸ் அல்டிமேட்டை பார்க்க பிக்பாஸ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். ஆனால் பழைய சீசன்களைப் போல இல்லாமல் இதை டிவியில் ஒளிபரப்பு செய்யாததால் பலர் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். ஆனாலும் அனைத்து ஞாயிறு கிழமைகளில் அந்த வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பை மூன்று மணி நேர தொடர் ஒளிபரப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

தொடர்புடையவை  குறட்டை விட்டு தூங்கிய நிரூப் டீம்.. அனைத்து முட்டையையும் திருடிய பாலா | BiggBoss Ultimate

தாமரை பொம்மையை வீசி எறிந்த நிரூப்..கடுப்பாகி திட்டிய சினேகன் | BiggBoss Ultimate Feb21 Promo 1 1

விளம்பரம்

ஜனவரி 30ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் அல்டிமேட் 16 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீசன் 1ல் கலந்து கொண்ட ஓவியா மற்றும் பரணி ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக வரவில்லை. எனவே 14 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, நிரூப், பாலா, அனிதா சம்பத், தாமரை, அபிநய், ஸ்ருதி, சினேகன், ஜூலி ஆகியோர் ஆவர். இதில் முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியே அனுப்பபட்டார். இரண்டாவது வாரம் சுஜா வெளியில் அனுப்பப்பட்டார். இதில் ஓவியா மற்றும் பரணி ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
பிக்பாஸ் அல்டிமேட் கமல் ப்ரோமோ வெளியான போதே சுவரை கொஞ்சம் உயர்த்தி கட்டுங்கள் என்று பரணியை மறைமுகமாக கூறியது போன்று இருந்தது.
எனவே பரணி கண்டிப்பாக கலந்து கொள்வார் என்ற கருத்தும் பிக்பாஸ் ரசிகர்களிடையே நிலவுகிறது. அதே போல் ஓவியா தனிமைபடுத்தப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு உடல்நிலை சரியாகிவிட்டால் உடனே பிக்பாஸ் இல்லத்திற்குள் அனுப்பப் படுவார் என்றும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. Youtube Video Code Embed Credits: Disney + Hotstar Tamil

தாமரை பொம்மையை வீசி எறிந்த நிரூப்..கடுப்பாகி திட்டிய சினேகன் | BiggBoss Ultimate Feb21 Promo 1 3

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கேப்டன் டாஸ்க் தாமரை மற்றும் பாலாவிற்கு இடையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் இரு அணியினரும் அவர்களின் குழந்தையை மற்ற அணியினரிடம் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். ஆனால் நிரூப் தாமரையின் பொம்மையை எல்லாரும் பார்க்கும் போதே எடுத்து விடுகிறார். இதனால் கடுப்பான சினேகன் நிரூப்பை திட்டுகிறார். எல்லாத்துக்குமே ரூல் பிரேக் பண்ணி விலையிடுறீங்க என்று நிரூப்பை பார்த்து கோபமாக கூறுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண…Watch BiggBoss Promo Below…

தொடர்புடையவை  பாலாவை கடுப்பாக்கிய நிரூப்.. ஆத்திரத்தில் கத்திய பாலா. | BiggBoss Ultimate Mar07 Promo2

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment