மத்தவங்க சாப்பாடுல நான் மண்ணை வாரி போடல..உடைந்து அழுத ஜூலி | Biggboss Ultimate Feb22 Promo 1

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தொடங்கப்பட்டதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவித நிகழ்ச்சி. எப்பொழுதும் பிக்பாஸ் ஆரம்பிக்கிறது என்றாலே யார் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள்? என்ற ஆவல் மக்களிடையே தொற்றிக் கொள்ளும். அதற்கேற்ப இணையங்களில் வதந்திகள் றெக்கை கட்டி பறக்கும். ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் சற்று வித்தியாசமானது. என்னவென்றால் கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து 70 நாட்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுதான்.

மத்தவங்க சாப்பாடுல நான் மண்ணை வாரி போடல..உடைந்து அழுத ஜூலி | Biggboss Ultimate Feb22 Promo 1 1

விளம்பரம்

ஜனவரி 30ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் அல்டிமேட் 16 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீசன் 1ல் கலந்து கொண்ட ஓவியா மற்றும் பரணி ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக வரவில்லை. எனவே 14 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, நிரூப், பாலா, அனிதா சம்பத், தாமரை, அபிநய், ஸ்ருதி, சினேகன், ஜூலி ஆகியோர் ஆவர். இதில் முதல் வாரமே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியே அனுப்பபட்டார். இரண்டாவது வாரம் சுஜா வெளியில் அனுப்பப்பட்டார்.
Youtube Video Code Embed Credits: Disney + Hotstar Tamil

மத்தவங்க சாப்பாடுல நான் மண்ணை வாரி போடல..உடைந்து அழுத ஜூலி | Biggboss Ultimate Feb22 Promo 1 3

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் “பிக்பாஸ் உங்கள் வாழ்வில் இருந்த தேவதைகள் மற்றும் பேய்கள் யார் என்ற டாஸ்க் கொடுக்கிறார்”. அதை பற்றி பேசும் போது அனைவர் கண்ணிலும் கண்ணீர் வருகிறது. ஜூலி பேசும்போது நான் யார் சோத்துலையும் மண் அள்ளி போட்டது இல்லை. எனவே எனக்கு நான் தான் தேவதை என்று கூறுகிறார். சினேகன் கூறும் போது என் அம்மா மட்டும் தான் என் வாழ்வில் இருக்கும் ஒரே தேவதை என்றும், ஸ்ருதி பேசும் போது என் அப்பா மட்டும் தான் என் வாழ்வில் பெரிய துரோகம் செய்தவர் என்றும் கூறுகிறார். Watch the below video…

தொடர்புடையவை  பிக்பாஸ் சீசன் 6ல் நுழைந்த சூப்பர் மாடல்.! யார் இந்த ஷெரினா? முழு விபரம் இதோ.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment