காதலர் தினத்தில் VJ அர்ச்சனாவுடன் டூர் சென்ற பாரதி கண்ணம்மா ஹீரோ.?? அப்போ லவ் கன்பார்மா?

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் பாகம் 1-ல் நடித்து வந்த அருண்பிரசாத் தற்போது தனது காதலியுடன் பிச்சாவரம் காடுகளுக்கு டூர் சென்றுள்ளார். தனது காதலி யார் என்பதை அருண் பிரசாத் இன்னும் அறிவிக்காத நிலையில், இருவரும் தனி தனி வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களிடம் மாட்டிக்கொண்டனர். பல இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்தது பாரதி கண்ணம்மா, குடும்பத் தலைவிகளின் ஆதரவு பெற்ற இந்த தொடர் கடந்த வாரம் நிறைவடைந்தது. இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பாரதி கண்ணம்மா சீசன் 2 வின் பாகம் 2 உடனடியாக துவங்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணி முதல் பாரதி கண்ணம்மா சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் இருக்கிறார்கள். இந்த தொடரிலும் கண்ணம்மாவாக வினுஷா தேவியே நடிக்கிறார். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.!

காதலர் தினத்தில் VJ அர்ச்சனாவுடன் டூர் சென்ற பாரதி கண்ணம்மா ஹீரோ.?? அப்போ லவ் கன்பார்மா? 1
இந்த நிலையில் அருண் பிரசாத்துக்கும், ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடிக்கும் அர்ச்சனாவும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு வெளியான தகவலின்படி அருண் பிரசாத்துக்கும், அர்ச்சனாவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக சீரியல் வட்டரங்கள் தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் அருண் பிரசாத்தும், விஜே அர்ச்சனாவும் ஒன்றாக காரில் இருக்கும் புகைப்படமும் வெளியானது. ஆனால் இருவரும் காதலிப்பது குறித்து எந்தவிதமான அதிகராப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் காதலர் தினம் கொண்டாட்டப்பட்டது. அப்போது திரைப் பிரபலங்கள் பலரும் தாங்கள் காதலித்து வரும் நபர்களை அறிமுகப்படுத்தியும் அவர்களின் புகைப்படங்களை பகிர்ந்தும் இருந்தனர். அது போல அருண் பிரசாத்தும் அர்ச்சனாவும் தனி தனி வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர்.

 

அதில் அருண் கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் காடுகளுக்கு டூர் செல்வது போல பகிர்ந்து இருந்தார். அதே மேலும் போட்டில் அமர்ந்து கொண்டு வீடியோவும் எடுத்து இருந்தார். அதே போன்ற ஒரு வீடியோவை அர்ச்சனாவும் பி[பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனாவுடன் செம்ம ஜாலியாக இருக்கீர்களா என்று கேள்வி எழுப்பினர். மேலும் சிலரோ உங்கள் கண்ணாடியில் அருண் பிரசாத் தெரிகிறார் இருவரும் காதல் செய்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இருவரும் தங்கள் காதலை அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில் இப்படி மறைமுகமாக அறிவித்து இருப்பதாகவே தெரிகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Video Below.! 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்