பிக்பாஸ்க்காக பல சீரியல்களின் நேரத்தை மாற்றிய விஜய் டிவி.! ஓடாத சீரியல் ஒன்றுக்கு முழுக்கு.!

பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பிக்க உள்ளதால் விஜய் டிவியின் முக்கிய சீரியல் ஒன்றை முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மேலும் பல சீரியல்களின் நேரத்தை மாற்றி உள்ளதாக தெரிகிறது. பிக்பாஸ் சீசன் 6 வருகிற ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மிக பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. வழக்கம் போல கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு, இதில் 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை உள்ளே இறக்கத் திட்டமிட்டுள்ளது விஜய் டிவி. 20 நபர்கள் என்பதால் 100 நாட்களுக்கு மேல் நடத்தப்படலாம் என்கிற கருத்தும் நிலவி வருகிறது. சீசன் 4 மற்றும் 5 சரியாக ஓடாததால் இந்த சீசனை சர்ச்சையான போட்டியாளர்களைக் கொண்டு வெற்றிகரமாக நடத்தி விட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது பிக்பாஸ். அதற்காக பல சர்ச்சை போட்டியாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளது.

பிக்பாஸ்க்காக பல சீரியல்களின் நேரத்தை மாற்றிய விஜய் டிவி.! ஓடாத சீரியல் ஒன்றுக்கு முழுக்கு.! 1

விளம்பரம்

விஜய் டிவியிலிருந்து குக் வித் கோமாளி புகழ் ரக்க்ஷன், சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, மதுரை முத்து, மைனா நந்தினி, விஜே அர்ச்சனா, விஜே மகேஸ்வரி, அமுதவாணன் போன்றவர்களையும், டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து, சின்னத்திரை நடிகைகள் ஸ்ரீநிதி, ரட்சிதா மகாலட்சுமி, வனிதாவின் முன்னாள் காதலர் நடன இயக்குனர் ராபர்ட், சமீபத்தில் திருமணமான ரவீந்தர், சன் மியூசிக்கில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜே கதிரவன், பழைய நடிகை விசித்ரா இவர்களுடன் இன்னும் சிலரையும் உள்ளே அனுப்ப விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நபர்கள் அதிகமாக இருக்கிற காரணத்தினால் இந்த முறை கண்டன்ட் அதிகமாக கிடைக்கும் என்று கணக்கு போட்டு காய்களை நகர்த்தி வருகிறது பிக்பாஸ்.

தொடர்புடையவை  தர்ஷினியை கரிகாலனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தாரா குணசேகரன்.??

பிக்பாஸ்க்காக பல சீரியல்களின் நேரத்தை மாற்றிய விஜய் டிவி.! ஓடாத சீரியல் ஒன்றுக்கு முழுக்கு.! 3

விளம்பரம்

எனவே பிக்பாஸ் தொடங்க இருப்பதால் விஜய் டிவியின் பல சீரியல்களில் நேரங்களில் மாற்றங்கள் இருக்கும் என்றே தெரிகிறது. மேலும் சமீபத்தில் தொடங்கப்பட்ட பாரதிதாசன் காலணி என்கிற சீரியலை முடித்து விட உள்ளதாக தெரிகிறது. இதன் கடைசி எபிசோடு இந்த வாரம் ஒளிபரப்ப உள்ளதாகவும் தெரிகிறது. இந்த நாடகம் மக்களின் மனங்களில் பெரிய அளவில் எந்த தாக்கத்தில் ஏற்படுத்தவில்லை. நடிகர்கள் அதிகமாக இருக்கும் இந்த நாடகம் மக்களிடம் எடுபடவில்லை என்றே சொல்ல வேண்டும். சிலர் இந்த நாடகம் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இந்த நாடகம் முடிவுக்கு வரும் என்றே தெரிகிறது.

பிக்பாஸ்க்காக பல சீரியல்களின் நேரத்தை மாற்றிய விஜய் டிவி.! ஓடாத சீரியல் ஒன்றுக்கு முழுக்கு.! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment