இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது அழைப்பு மற்றும் இணையம் சேவைகளின் கட்டணங்களை உயர்த்த போவதாக அறிவித்துள்ளன.
பாரதி ஏர்டெல், ஜியோ, வோடபோன்-ஐடியா ஆகிய நிறுவனங்கள் இந்தியாவின் 90 சதவிகித வாடிக்கையாளர்களை தங்கள் வசம் வைத்துள்ளன. ஜியோவின் வருகைக்கு பின்னர் தொலைபேசி நிறுவங்கள் பல்வேறு நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. சந்தையில் கோலோச்சிய ஏர்செல் நிறுவனம் கடந்த வருடம் தனது சேவையை நிறுத்திவிட்டது.
அதேபோல, நிதி நெருக்கடி காரணமாக வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைத்து சேவையை வழங்கி வருகிறனர்.

கடந்த ஆண்டு இறுதியில், ரூ.10, 20 போன்ற சிறிய அளவிலான ரீச்சார்ஜ் முறையை ரத்து செய்து ரூ.35ஆக மாற்றியது. இந்நிலையில் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாத நிறுவனங்கள் அழைப்பு மற்றும் இணையம் தொடர்பான சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த போவதாக தெரிவித்துள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி முதல் தனது கட்டண முறை அமலுக்கு வருமென ஏர்டெல் அறிவித்துவிட்டது. அதேபோல, டிசம்பர் 5ஆம் தேதியிலிருந்து ஜியோ நிறுவனத்தின் கட்டணமும் உயருகிறது. தற்போது உள்ளதை விட 42% கட்டணம் உயர்த்தப்படும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்திற்கு 35,586 கோடி ரூபாய் அளவிலான கடனும், வோடபோன்-ஐடியா நிறுவனத்திற்கு சுமார் 44,150 கோடி ரூபாய் அளவிலான கடனும் இருப்பதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.