மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய சபாநாயகராக காங்கிரசின் நானா பட்டோலே போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார்.
பலத்த அரசியல் பரபரப்புக்கிடையே பாஜகவின் வியூகங்களை வீழ்த்தி சிவசேனா கூட்டணியின் உத்தவ் தாக்காரே முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் நானா பட்டோலே வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதேபோல், பாஜக சார்பில் கிஷன் கத்தோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். சட்டசபையில் பாஜகவிற்கு போதிய பலம் இல்லாத நிலையில் கிஷன் கத்தோர் வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார். இதனால் பட்டோலே போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய சபாநாயகராக பொறுப்பேற்கும் நானா பட்டோலே(56) விதர்பா பகுதியில் உள்ள சக்கோலி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாகவும் பன்டாரா-கோன்டியா பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாகவும் இருந்துள்ளார். அதே போல் இவர் இதற்கு முன்னர் பாஜவின் முக்கிய தலைவராக இடுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.