அனுமதியின்றி பேரணி! ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது வழக்கு!

காவல்துறையின் உரிய அனுமதியின்றி பேரணி நடத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 8000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போன்றோர் போராடி வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் இது வரை 26 பேர் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்
DMK rally
பேரணிக்கு கூடிய ஒரு பகுதி

இந்நிலையில், சட்டம் அமலானதும் மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக ஆர்ப்பட்டதை திமுக நடத்தியது. ஆனால் இது போதாதது என கருதிய திமுக தலைமை, அணைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. இதனால் நேற்று நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், திக தலைவர் வீரமணி, மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.

காவல்துறை அனுமதியின்றி சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நேற்று பேரணி நடத்தியதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட எட்டாயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  காஷ்மீர் விவகாரம்: விசாரணையை துவங்கும் அமெரிக்கா!

பேரணிக்கு முன்னதாக காவல்துறையிடம் திமுக சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. அதேபோல திமுக பேரணிக்கு தடை கேட்டு மற்றோரு வழக்கினை உயர்நீதி மன்றம் விசாரிக்கவே, தீவிர கண்காணிப்புக்கு உட்பட்டு பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

விளம்பரம்

Leave a Comment