கேள்வியால் பாஜகவை துளைத்த பாஜக தலைவர்!

திருத்தப்பட்ட தேசியக்கொடி உரிமைச் சட்டத்தில் ஏன் இஸ்லாமியர்கள் இணைக்கவில்லை மேற்கு வங்காளத்தில் பாஜக தலைவரான சந்திரகுமார் போஸ் கேள்வி கேட்டுள்ளார்.

தேசிய குடியுரிமை சட்ட திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டங்கள் மீது காவல்துறை மேற்கொண்டு அடக்குமுறை காரணமாக கலவரங்கள் வெடித்தன. இதன் விளைவாக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 27 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விளம்பரம்
கேள்வியால் பாஜகவை துளைத்த பாஜக தலைவர்! 1
இதற்கும் நல்ல பாஜக துணைத் தலைவர் சந்திரகுமார் போஸ்

இந்நிலையில் இச்சட்டத்தால் பரவலாக பாதிக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மாபெரும் பேரணி மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு அமைதியான முறையில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இச்சட்டத்தை குறித்து மேற்கு வங்காள பாஜகவின் துணைத் தலைவரான சந்திரகுமார் போஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள அவர், “திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மதங்களை சார்ந்ததல்ல என நாம் சொல்லும்போது அது இந்துக்கள், சீக்கியர்கள், புத்தர்கள், கிருஸ்துவர்கள், ஜெயின்கள் போன்ற மதத்தவரை பற்றி ஏன் பேச வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  நேபாளத்தில் நீர் மின்நிலையம் கட்டும் இந்தியா - இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நேபாள பயணத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் ஏன் இஸ்லாமியர்களை இணைக்கவில்லை இது குறித்து வெளிப்படையாக இருங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“இஸ்லாமியர்கள் அவர்கள் நாட்டில் துன்புறுத்த படாமல் இருந்திருந்தால் அவர்கள் ஏன் மற்றொரு நாட்டுக்கு வரப்போகிறார்கள். ஆதலால் அவர்களால் நமக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படாது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் வாழும் ‘பலூச்’ மக்கள் மற்றும் பாகிஸ்தானில் வாழும் அகமதியா போன்ற சிறுபான்மை மக்களின் வாழ்வைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என மற்றோரு பதிவில் கேள்வி கேட்டுள்ளார்.

விளம்பரம்

சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தம்பி பேரனே இந்த சந்திரகுமார் போஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Leave a Comment