நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக இருக்கின்றனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது. இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட கதையெழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்துள்ளார்.

1976 ஆம் ஆண்டு இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. அன்று முதல் இன்று வரை 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்து, தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார்.இசை உலகின் ஜாம்பவனாக இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றளவும் கொடிகட்டி வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை இருக்கிறார்.

பாடல்கள் இசை அமைப்பது மட்டுமின்றி நல்ல பாடகராகவும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளவர் இளையராஜா. தமிழிலுள்ள அத்தனை முன்னணி நடிகர்களுக்கு இசை அமைத்துள்ளார். ரஜினி, கமல், மோகன், சத்யராஜ், விஜயகாந்த், விஜய், ராமராஜன், என இவர் இசையில் முன்னணி நடிகர்கள் பாலரும் பெரிய பெரிய ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளனர். தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, மராத்தி மொழி படங்களிலும் இவருடைய பாடல்கள் ஒளித்துள்ளன.

கர்நாடக இசை மற்றும் மேலைநாட்டு இசையிலும் கைதேர்ந்தவர்கவே இளையராஜா இருக்கிறார். இவருக்கு பல விருதுகளும், பாராட்டுகளும் குவிந்துள்ளன. இந்திய அரசின் மிக முக்கிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் 2010ஆம் ஆண்டு வாங்கினர். மேலும் 5 தேசிய விருதுகளும், 2018ஆம் பத்ம விபூஷண் விருதையும் இவருக்கு அளித்து இந்திய அரசு கவுரவித்துள்ளது. பல விருதுகளும், ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்ட இவர் அண்மை காலமாக செய்து வரும் செயல்கள் ரசிகர்கள் பலருக்கும் பிடிக்காமல் உள்ளது.

ஒரு புத்தக வெளியிட்டு முன்னுரையை எழுதிய இளையராஜா அதில் அண்ணல் அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு எழுதியது மட்டுமின்றி , இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா மோடியும், அம்பேத்காரையும் ஒப்பிட்டு பேசி இருந்தார். அந்த அந்த இளையராஜாவின் பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இந்த பேச்சிற்கு பலத்த கண்டனங்கள் எழுந்து இருந்தது. இதனை அவர் பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை.

இப்பொது ராஜ்யசபா எம்.பியாக போகும் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பல்வேறு திரைத்துறையினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், சிரஞ்சீவி, சரத்குமார், நடிகை குஷ்பூ என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை இந்த வலைதள பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
