குத் வித் கோமாளி அஸ்வினை வைத்து பிரபுசாலமன் இயக்கி வந்த செம்பி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மைனா, கும்கி, கயல், தொடரி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் பிரபு சாலமன். இவர் சில நாட்களாக பெரிதாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்து வந்தார். நீண்ட நாள் இடைவேளைக்குப் பிறகு குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினை வைத்து செம்பி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கோவை சரளா, தம்பி ராமையா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை Trident Arts நிறுவனம் தயாரித்துள்ளது. ட்ரலைர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் கோவை சரளா மாறுபட்ட கோணத்தில் 90 வயது முதியவராக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபு சாலமன் படங்களை பொறுத்தவரை இயற்கை அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். இதனால் இந்த படமும் அப்படி எடுக்கப்பட்டிருக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்ந படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது.

தற்போது இந்த படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இன்று மாலை படத்தின் ட்ரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருந்தது. 90 வயது முதியவராக கோவை சரளாவின் புகைப்படம் பிரமிப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அந்த ட்ரைலரை நீங்களும் காண.. Watch Sembi Trailer Below
Video Courtesy: Trident Arts