விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி கலாட்டா நிகழ்ச்சிகளுக்கு என்றுமே பஞ்சமில்லை. ரியாலிட்டி ஷோக்களில் முதன்மை இடம் வகிப்பது விஜய் டிவி தான். அந்த வகையில் மக்களின் மனங்களை கவர்ந்த ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளிதான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் ஒரு நிகழ்ச்சியாக இது இருக்கிறது. சமையல் என்றாலே ஒரு சீரியஸ் மனநிலை தான் இருக்கும். ஆனால் ஒரு சமையல் நிகழ்ச்சியை இத்தனை காமெடியாக கொண்டு செல்ல முடியும் என்று நிகழ்த்தி காட்டியது இந்த நிகழ்ச்சி தான். சேட்டைகள் நிறைந்த ஒரு உதவியாளரை கோமாளிகள் என்ற பெயரில் வைத்துக் கொண்டு அவருடன் இணைந்து விதவிதமான சமையல்களை செய்து பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடுவர். இது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசன் நடந்து வருகிறது. தற்போது இந்த மூன்றாவது சீசனும் முடிந்து விட்டதாக செய்திகள் பரவி வருகின்றன.

குக் வித் கோமாளி ஷோ பலருக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்திருக்கிறது. கொரோனா லாக் டவுன் சமயத்தில் பலருக்கும் ஆறுதலாக இருந்த ஒரு நிகழ்ச்சியாக குத் வித் கோமாளி இருந்தது. இவர்கள் செய்யும் சேட்டைகளும் காமெடிகளும் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடும். அனைவருக்கும் ஃபேவரட் என்றால் அது இரண்டாவது சீசன் தான். இந்த சீசன் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சீசனில் வந்த பலரும் தற்போது வெள்ளித்திரை, சின்னத்திரைகளில் கமிட்டாகி நடித்து வருகின்றனர். தற்போது மூன்றாவது சீசன் முடிவடைந்துள்ளதாக சிவாங்கி தனது instagram-ல் பதிவிட்டுள்ளார். அதில் அவர் சீசன் முடிந்து விட்டது என்றும் அடுத்த சீசனில் உங்களை சந்திப்பதாகவும் கூறி இருக்கிறார்.
மேலும் சீசன் 3 யில் வித்யூலேகா டைட்டில் வின்னர் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீசன் 1ல் வனிதாவும், சீசன் 2வில் கனியும் டைட்டிலை ஜெயித்து இருந்தனர். இந்த நிலையில் சீசன் 3யில் ஸ்ருதிகா, தர்ஷன், அம்மு அபிராமி, நீ ரோஷ்ணி, முத்துக்குமார், சந்தோஷ் பிரதாப், கிரேஸ் கருணாஸ், வித்யூலேகா போன்ற பலர் பங்கேற்று இருந்த நிலையில் யார் டைட்டில் ஜெயிப்பார்கள் என்ற கடுமையான போட்டி இருந்து வந்தது. இந்த நிலையில் விஷ்யூலேகா டைட்டிலை ஜெய்த்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குக் வித் கோமாளி நிறைவடைந்ததால் அடுத்தபடியாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.