“அங்க எதோ ஒரு சம்பவம் நடக்குது”!! “மாப்ள நீ காப்பாத்துற மாதிரி தெரில…விட்டுறா..!! “ஊஞ்சலில் தொங்கியபடி மாட்டிக்கொண்டு முழித்த புகழ்!!

வெளியிட்டது

சின்னத்திரைகளிலும் ஒளிபரப்பாகும் நிறைய நிகழ்ச்சிகள் ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பை பெற்று சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பெரும்பாலானவை விஜய் டீவியை சேர்ந்ததே. நீயா நானா, பிக் பாஸ், பிபி ஜோடிகள், சூப்பர் சிங்கர், சுஐப்ர் சிங்கர் ஜூனியர் என பல்வேறு நிகழ்ச்சிகளும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. இப்பொது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோதான் குக் வித் கோமாளி. இது தற்போது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், அதிர்ச்சி அருண் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"அங்க எதோ ஒரு சம்பவம் நடக்குது"!! "மாப்ள நீ காப்பாத்துற மாதிரி தெரில...விட்டுறா..!! "ஊஞ்சலில் தொங்கியபடி மாட்டிக்கொண்டு முழித்த புகழ்!! 1

புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், ரோஷினி, வித்யூலேகா, அம்மு அபிராமி, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள்.சமையல் போட்டி என்றாலும் இதில் மிகவும் பேசப்படுவதும் ரசிக்கப்படுவதும் கோமாளிகளாக வந்து செய்யும் சேட்டைகளை தான் மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். இவர்கள் இணைந்து சமைக்கும் போது நடக்கும் ரகளைகள் உண்மையிலேயே சிரிப்பை வரவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியாது. விஜய் டிவியின் பல மைல்கால் நிகழ்வுகளில் இந்த நிகழ்ச்சியை துவங்கியதும் இவர்களுடைய மிக முக்கிய வெற்றியே. குக் வித் கோமாளி ப்ரோமோவை பார்ப்பதற்கு பல ரசிகர்கள் உள்ளனர். ப்ரோமோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து விடுவது வழக்கம்.

எப்போதும் போல இந்த வாரமும் மிகவும் கலகலப்பாகவே சென்றது. நடுவில் ஊஞ்சல் காட்டி தொங்கவிட கூட்டாக இருவர் இருவர் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். புகழும், பவித்ரா லக்ஷ்மியும் உட்கார்ந்த பொது ஊஞ்சல் கம்பி அருக, பவித்ரா சுதாரித்து கொண்டு எழுந்து ஓடினார். ஆனால் புகழ் மாட்டிக்கொள்ள, ரக்ஷனும் பாலாவும் அவரை காப்பாற்றுவதாக கூறி கீழ் தூக்கி போட்டனர். வெட்டி அவிழ்ந்து புகழ் தவித்து கொண்டிருந்தார். சிவாங்கி டஸ்கில் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் பார்த்து ரசித்து கொண்டிருந்தார்.

பின்னர் அதே ஊஞ்சலில் ரக்ஷனும் அம்மு அபிராமியும் அமர, டி.ஜே. உடனே தங்கச்சி சென்டிமென்ட் பாடல் போட்டு அரங்கத்தை அதிர வைத்தார். அந்த கலகலப்பான எபிசொடை நீங்களும் காண..

Video Courtesy – VijayTelevision

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்