நடிகர் அருள்நிதி , பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி 2. இப்படத்தினை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். முன்னதாக அருள்நிதி மற்றும் அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகிய டிமாண்டி காலனி படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று இருந்தது. தற்போது அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பகுதி வெளியாகி இருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. உடன் வெளியான அனைத்து படங்களையும் தாண்டி வெற்றிபெற்று இருக்கிறது. நல்ல கதைகளை மக்களுக்கு கொடுத்து வரும் அருள்நிதி எப்பொழுதும் அதற்கான பாதையில் இருந்து விலகியதே இல்லை. தற்போது இப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருந்தனர்.

தற்போது அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி முதல் ஜீ 5 ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் வருகிற பண்டிகை காலங்களை முன்னிட்டு இப்படமானது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.