தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷின் மகனுக்கு தற்போது சென்னை காவல்துறை அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரின் 50வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதை சமீபத்தில் அறிவித்திருந்தார் தனுஷ். 18 ஆண்டுகளாக தனது மனைவியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இருப்பினும் இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இன்னமும் விவாகரத்து செய்யவில்லை.

தனது மகன்களை மட்டும் அவ்வப்போது தந்தையை பார்ப்பதற்காக அனுப்பி வைக்கிறார் ஐஸ்வர்யா. சமீபத்தில் தனது மாமனார் ரஜினியின் வீட்டிற்கு அருகிலேயே மிகப்பெரிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். விரைவில் ஐஸ்வர்யாவும், தனுஷும் இணைவார்கள் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியான நிலையில் அதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. இறுதியாக தனுஷின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி விளையாட்டு விழாவில் தனுஷும், ஐஸ்வர்யாவும் ஒன்றாக கலந்து கொண்டனர். அதன் பின்னர் தனுஷும் ஐஸ்வர்யாவும் சந்தித்துக் கொள்ளவே இல்லை. இந்த நிலையில் தனுஷின் 17 வயது மகன் லைசென்ஸ் இல்லாமலும், தலைக்கவசம் அணியாமல் ஆர்15 உயர் ரக பைக்கை ஓட்டி வரும் காணொளி இணையத்தில் வைரலானது.
இதைப் பார்த்த பலரும் டிடிஎஃப் வாசனுக்கு ஒரு நியாயம், தனுஷின் மகனுக்கு ஒரு நியாயமா என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் தற்போது சென்னை பெருநகர காவல் போக்குவரத்து காவல்துறை தனுஷின் மகனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆர்15 பைக்கை ஓட்டி வந்ததால், அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
YouTube Video Embed Code Credits: Polimer News