பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 46 நாட்கள் நடந்து முடிந்ததுள்ளது. இன்று 47வது நாள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்திருக்கிறது. இன்றைக்கு நடந்த டாஸ்க்கில் ஜெயித்து மீண்டும் வீட்டின் இந்த வார தலைவராக மாறி இருக்கிறார் தினேஷ். பூர்ணிமாவை தொடர்ந்து இரண்டு முறை கேப்டனாக பதவி ஏற்று இருக்கிறார். இருந்தபோதிலும் விசித்ரா மற்றும் அர்ச்சனாவை சிறைக்கு அனுப்பும் பிரச்சனை இன்னும் முடிந்த பாடில்லை. வீட்டில் பலர் மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நன்றாக விளையாடிக் கொண்டிருந்த அர்ச்சனாவையும், விசித்ராவையும் இந்த வாரம் என்று வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் தேர்ந்தெடுத்ததால் வெளியில் அமர்ந்து விசித்ராவும் அர்ச்சனாவும் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஜெயிலுக்கு செல்ல போவதில்லை என்கிற முடிவையும் அவர்கள் எடுத்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் கண்டென்ட் கொடுப்பவர்களாக மாயா, பூர்ணிமா, விசித்ரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர்தான் இருந்து வருகின்றனர். சரவண விக்ரம், கானா பாலா, பிராவோ, அக்ஷயா போன்றவர்கள் எதற்கு இருக்கிறார்கள் என்று தெரியாத நிலையே இருந்து வருகிறது. எந்த சண்டையிலும் பங்கெடுத்துக் கொள்வதில்லை. தங்கள் கருத்துக்களையும் ஆணித்தரமாக சொல்வதில்லை. அவர்களின் முகம் கூட அதிகமாக காட்டப்படுவதில்லை. இன்னும் சொல்லப் போனால் 24 மணி நேரலையில் கூட அவர்களின் முகம் தெரிவதில்லை. இப்படியாக இருக்கும் நிலையில் இந்த வாரம் கானா பாலா, அக்ஷயா, சரவண விக்ரம், விசித்ரா, ரவீனா, மணி, பிராவோ, பூர்ணிமா என மொத்தம் 8 பேர் நாமினேஷனில் உள்ளனர்.

இதில் அக்ஷயா அல்லது சரவண விக்ரம் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நமது தமிழ்க்ளிட்ஸ் பக்கத்தில் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பில் கூட கடைசி இடத்தில் அக்ஷயா மற்றும் விக்ரம் ஆகிய இருவர் இருக்கின்றனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக விசித்ரா சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை வாங்கி முதலிடம் பிடித்துள்ளார். மணி, ரவீனா, பூர்ணிமா, ப்ராவோ போன்ற இளம் போட்டியாளர்கள் ஐந்து இலக்கத்தில் வாக்குகளை வாங்கி வரும் நிலையில், ஆறு இலக்கத்தில் வாக்குகளை குவித்து முதலிடத்தை பிடித்து அசத்தி வருகிறார் விசித்ரா.

மக்களின் ஆதரவு தொடர்ந்து விசித்ராவிற்கு இருந்து கொண்டே வருகிறது. இந்த நிலை நீடித்தால் விசித்ரா டைட்டில் வின்னர் ஆகும் வாய்ப்பு கூட இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.