படம் வேற லெவெல்.! Climax ட்விஸ்ட் தாறு மாறு.! டிரைவர் ஜமுனா படம் பற்றி பொதுமக்கள் கருத்து.!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள டிரைவர் ஜமுனா இன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து தற்போது பொதுமக்கள் தங்கள் விமர்சனங்களை கூறி வருகின்றனர். தனது இயல்பான நடிப்பாலும் தோற்றத்தாலும் பல ரசிகர்களை பெற்று இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த காக்கா முட்டை படம் பெரிய அளிவில் ஹிட் அடித்தது. பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல், யதார்த்தமான கதைகளை நடித்து வெற்றி பெற்றுள்ளர் ஐஸ்வர்யா.அந்த வகையில் தற்போது பெண் கார் ஓட்டுநராக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒரு பெண் கார் டிரைவராக வேலை பார்த்தால் வரும் இன்னல்கள் பற்றிய படமாக உள்ளது. அந்த படத்திற்கு டிரைவர் ஜமுனா எனப் பெயரிடப்பட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படம் வேற லெவெல்.! Climax ட்விஸ்ட் தாறு மாறு.! டிரைவர் ஜமுனா படம் பற்றி பொதுமக்கள் கருத்து.! 1
இந்த படத்தை வத்திக்குச்சி படத்தை இயக்கிய இயக்குனர் கிங்க்ஸ்லின் இயக்கியுள்ளார். இந்த படத்தை பதினெட்டு ரீல்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. கோகுல் பினாய் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். க்ரைம் திரில்லர் பாணியில் இந்த படத்தை எடுத்துள்ளனர். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சமீபகாலமாக பெண்களை முன்னிறுத்தி வரும் படங்களில் ஐஸ்வர்யா நடித்து வருகிறார். அந்த வகையில் டிரைவர் ஜமுனா படமும் மிகப்பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் முழுவதும் சாலையில் நடக்கும் காட்சிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் டிரைவரின் ஒரு நாள் பயணத்தை குறிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  வாரிசு படத்தில் இருந்து மனதை உருக்கும் 3rd சிங்கிள் "அம்மா" வெளியானது.! பாட்டு ரொம்ப நல்லாருக்கு.!

படம் வேற லெவெல்.! Climax ட்விஸ்ட் தாறு மாறு.! டிரைவர் ஜமுனா படம் பற்றி பொதுமக்கள் கருத்து.! 3

பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரத்தம் சொட்ட சொட்ட காயத்துடன் நின்று ஐஸ்வர்ய டீ குடிப்பது போல இருந்தது. ட்ரைலரும் வேற லெவல் த்ரில்லிங்காக இருந்தது. தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் படம் வெளியாகி உள்ளது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் வேற லெவெலில் இருப்பதாகவும், கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் இருந்ததாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்புக்காகவே படத்தை இரண்டு முறை கூட பார்க்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். நீங்களும் அந்த வீடியோவை காண..Watch the வீடியோ below..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Chennai Waalaa

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment