இந்த கல்யாணத்தை நிறுத்துங்க அக்கா.! காவ்யாவிடம் கை கூப்பி அழும் சக்தி.! என்ன நடக்க போகுதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாக இருக்கிறது. அதில் தற்போது காவியா மற்றும் பிரியாவின் தங்கை சக்தி அர்ஜுனனை காதலித்து வரும் விஷயம் இருவருக்கும் தெரிய வந்துள்ளது. இதனால் சக்திக்கு ஏற்பாடு செய்திருந்த திருமணமும் அர்ஜூனுக்கு ஏற்பாடு செய்திருந்த திருமணமும் நின்று போகும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. சக்தி தனது சகோதரிகளிடம் இந்த திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லி கதறி அழுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கல்யாணத்தை நிறுத்துங்க அக்கா.! காவ்யாவிடம் கை கூப்பி அழும் சக்தி.! என்ன நடக்க போகுதோ 1
ஈரமான ரோஜாவே சீரியலில் ஆரம்பத்தில் பார்த்திபனுக்கு நிச்சயம் செய்திருந்த பெண்ணை தம்பி ஜீவாவும், தம்பி ஜீவா காதலித்த பெண்ணை பார்த்திபனும் திருமணம் செய்து கொண்டனர். இந்த குழப்பமே பல நாட்களாக நீடித்து வந்த நிலையில் தற்போது புது பிரச்சனை கிளம்பி இருக்கிறது. அதாவது பிரியா மற்றும் காவ்யாவின் தங்கையாக இருக்கும் சக்தி, பார்த்திபன் ஜீவாவின் தம்பியாக இருக்கும் அர்ஜுனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் விரும்பும் நிலையில் வீட்டில் இத்தனை நாள் சொல்லாமல் மறைத்து வைக்கின்றனர். இருவருக்கும் தனித்தனியே திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  ரட்சிதா லக்கினால் இந்த வீட்டில் இருக்கிறார் என்று சொன்ன ஜனனி.! ஜனனியை திருப்பி கேள்வி கேட்ட கமல்.

இந்த கல்யாணத்தை நிறுத்துங்க அக்கா.! காவ்யாவிடம் கை கூப்பி அழும் சக்தி.! என்ன நடக்க போகுதோ 3
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பிரியாவும் காவியாவும் இணைந்து சக்தியிடம் என்ன பிரச்சனை என்று கேட்கின்றனர். அப்போது அர்ஜுனை காதலித்து வரும் விஷயத்தை போட்டு உடைக்கிறார் சக்தி. இதனால் இருவருக்கும் திருமணம் நடைபெறுமா என்கிற எதிர்பார்ப்பு நிலவி இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment