நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை சினேகா நடித்துள்ள ‘ஷார்ட் பூத் த்ரீ’ என்கிற படத்தின் ட்ரைலர் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் வெங்கட் பிரபுவுடன் இணைந்து சினேகா உள்ளிட்ட பல முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். திருமணத்திற்கு பின்னர் படங்களை நடிப்பதை வெகுவாக குறைத்து விட்டார் சினேகா. பிரசன்னாவுடன் திருமணத்திற்கு பிறகு இவருக்கு விஹான் மற்றும் ஆதிந்த்யா என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதன் பின்னர் படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துவிட்ட சினேகா கடைசியாக 2020 ஆம் ஆண்டு பட்டாசு என்கிற தமிழ் படத்திலும், 2023 ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் என்கிற மலையாள படத்திலும் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் பெரிய அளவில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து மூன்று ஆண்டு இடைவெளிக்கு பின்னர் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். ‘ஷாட் பூத் த்ரீ’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கைலாஷ் ஹீட், பிரனதி பிரவின், பூவையார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அருணாச்சலம் வைத்தியநாதன் இந்த படத்தை இயக்க, ராஜேஷ் வைத்யா இசையமைத்திருக்கிறார். யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நீங்களும் அந்த ட்ரைலர் வீடியோவைக் காண..! கீழே கொடுக்க வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Saregama Tamil