விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சக்தியின் திருமணத்தை நிறுத்திவிட்டு காவியாவும் பிரியாவும் அவரை அர்ஜுனனின் திருமண நடைபெறும் இடத்திற்கு அழைத்து வருகின்றனர். ஆனால் அதற்குள் அர்ஜுன் வேறு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகிறார். இதனால் உறைந்து போன சக்தி அர்ஜுனை பார்த்து கதறிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஈரமான ரோஜாவே தொடரில் அர்ஜுனும் சக்தியும் காதலித்து வருகின்றனர். ஆனால் குடும்பத்தை மீறி தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லி அர்ஜுன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். அதே சமயம் சக்திக்கும் கவின் என்பவருடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. தற்போது கவினை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி திருமணத்தை நிறுத்திவிட்டு சக்தி, பிரியா, காவியா என அனைவரும் வெளியேறுகின்றனர். வெளியேறியவர்கள் நேராக அர்ஜுனுக்கு திருமணம் நடக்கும் இடத்திற்கு வருகின்றனர். ஆனால் அதற்குள் அர்ஜுனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் முடிந்து விடுகிறது.

இதனால் உடைந்து போன சக்தி அர்ஜுனை பார்த்து கத்துகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television