அப்பத்தாவின் கதையை முடிவுக்கு கொண்டு வந்த இயக்குனர்.? கதறி அழும் சக்தி, ஜனனி.! என்ன நடந்தது?

சன் தொலைக்காட்சியில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் தற்போது அடுத்த அதிரடி நடந்துள்ளது. அதில் அப்பத்தாவின் கதையை இயக்குனர் முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாகவே தெரிகிறது. விபத்தில் அப்பத்தா இறந்துவிட்டது போலவும், அவரது புடவையை வைத்து ஜனனி அழுவது போலவும் ப்ரோமோ வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருக்கின்றனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எதிர்நீச்சல்’ சீரியல் சின்னத்திரை தொடர்களிலேயே டாப் ஹிட் தொடராக ஓடிக் கொண்டிருக்கிறது. பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வந்தனர். அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மாரிமுத்து தான். ஆதி குணசேகரனாக தனது நகைச்சுவையான பாணியில் வில்லத்தனங்களை செய்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்பத்தாவின் கதையை முடிவுக்கு கொண்டு வந்த இயக்குனர்.? கதறி அழும் சக்தி, ஜனனி.! என்ன நடந்தது? 1

விளம்பரம்

ஆனால் அவர் இறப்புக்கு பின்னர் இந்த சீரியலின் சுவாரஸ்யம் முற்றிலும் குறைந்து போனது. ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை நடிகர் வேலராமமூர்த்தி ஏற்று நடித்து வந்தார். இருப்பினும் மாரிமுத்து இடத்தை அவரால் நிரப்ப இயலவில்லை. தற்போது கதைப்படி ஆதி குணசேகரன் தனது அப்பத்தாவை கொலை செய்வது போல திட்டமிட்டு வருகிறார். அதற்காக அவர் ஏற்பாடுகளை செய்து வந்தார். ஆனால் கதையில் திடீர் திருப்பமாக ஆதி குணசேகரனும் அப்பத்தாவும் காணாமல் போய்விடுகின்றனர். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விசாலாட்சி தனது மருமகளிடம் வந்து அப்பத்தா எங்கே? என்று கேட்கிறார். அப்போது ரேணுகா அப்பத்தா போயிடுச்சு, உங்கள் பிள்ளைகள் எல்லாம் அவரை கொன்று விட்டார்கள் என்று கூறுகிறார்.

தொடர்புடையவை  ஹேர் ஸ்டைலை மாற்றி அழகு பதுமை போல மாறியுள்ள ஆல்யா.. வேற லெவல் Transformation

அப்பத்தாவின் கதையை முடிவுக்கு கொண்டு வந்த இயக்குனர்.? கதறி அழும் சக்தி, ஜனனி.! என்ன நடந்தது? 3
மறுபுறம் ஈஸ்வரியிடம் ஜீவானந்தம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது குணசேகரன் செய்த தவறை வெளியில் கொண்டு வருவதற்கு நம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகிறார். இதனால் ஈஸ்வரி குழப்பத்தில் ஆழ்கிறார். இதற்கிடையில் ஜனனியும் சக்தியும் அப்பத்தா சென்ற வண்டி எரிந்த இடத்தில் அவரின் புடவையை கையில் வைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கின்றனர். ஆனால் ரசிகர்கள் பலரும் அப்பத்தா உயிருடன் வருவார் என்று தங்களது கருத்துக்களை கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ நிறைவடைகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment