ஜீவானந்தம் மனைவியை கொன்றது குணசேகரன் என்கிற உண்மையை கண்டுபிடித்த கெளதம்

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்தவர்கள் ஆதி குணசேகரன் தான் என்பதை கௌதம் கண்டுபிடிக்கிறார். அதே சமயம் ஜீவானந்தத்தை ஈஸ்வரி சென்று சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் அடுத்த என்ன நடக்குமோ? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீவானந்தம் மனைவியை கொன்றது குணசேகரன் என்கிற உண்மையை கண்டுபிடித்த கெளதம் 1
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து காணாமல் சென்று விட்டார். இந்த நிலையில் அவருக்கு ஒரு அண்ணன் இருப்பது போல கதை நகர்கிறது. சுவடி எடுத்து பார்த்ததில் அவர் இரண்டாவது குழந்தையாக இருக்க வேண்டும். அவருக்கு ஒரு அண்ணன் இருக்க வேண்டும் என்று ஜோசியர் கூறுகிறார். இதை விசாலாட்சியும் உண்மை என கூறுகிறார். இதனால் ஆதி குணசேகரனுக்கு அண்ணன் கதாபாத்திரம் விரைவில் என்ட்ரி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் விசாலாட்சி கண்ணீருடன் வீட்டில் உள்ள அனைவரிடமும் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நந்தினி நீங்கள் என்ன செய்வீர்கள் என்று அவரை ஆறுதல் சொல்லிக் கொண்டு இருக்கிறார். இதற்கிடையில் கௌதமுக்கு ஆதி குணசேகரன் தான் ஜீவானந்தத்தின் மனைவியை கொன்ற விஷயம் தெரிய வருகிறது. இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க ஈஸ்வரி ஜீவானந்தமை சென்று சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்