ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் கேபி. குழந்தை நட்சத்திரமாக வந்த இவர் தற்போது சின்னத்திரை நடிகையாக உருவெடுத்து இருக்கிறார் கேபிரியல்லா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய பின்னர் இவரது வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து சீரியல் வாய்ப்புகள் வர தொடங்கியது.

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்து கதாநாயகியாக சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இந்த தொடரின் மூலம் உருவாகியது. இந்த தொடர் தற்போது முடிவடைந்து இருக்கும் நிலையில், சன்டிவியில் மருமகள் தொடரில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து பட்டையை கிளப்பி வருகிறார் கேபி.

இந்த தொடருக்காக தற்போது சண்டை காட்சியில் நடித்து உள்ளார் கேபிரியல். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ரசிகர்கள் கேபியின் முயற்சியை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram