துப்பாக்கி கிடைத்தது எப்படி! கொலை வழக்கில் சிக்கிய விஜய்யின் பதில்!!

துப்பாக்கி கிடைத்தது எப்படி! கொலை வழக்கில் சிக்கிய விஜய்யின் பதில்!! 1

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வண்டலூர் அருகே டிப்ளமா மாணவர் முகேஷ் குமார் (19) சுடப்பட்ட வழக்கில் விஜய் தப்பியோடியதை அடுத்து அவரது சகோதரர்களான உதயா மற்றும் அஜித் இருவரையும் தாழம்பூர் போலீசார் கைது செய்து விசாரித்து வந்தது, இந்த நிலையில் விஜய் இன்று, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இதையடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யபட்ட நிலையில், விஜயை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இந்த கொலை சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. முதலில் கொலையாளி பயன்படுத்திய துப்பாக்கி எங்கிருந்து வந்தது என்பதான கேள்விகள் எழுந்தன.

விளம்பரம்

இதற்கு பதில் அளித்த விஜய், அந்த துப்பாக்கி இரண்டு வருடங்களுக்கு முன்னர், குப்பையில் இருந்து எடுத்ததாக, அதை யாருக்கும் தெரியாமல் மண்ணில் புதைத்து வைத்ததாகவும் கூறியுள்ளார். இருந்தாலும் முழு உண்மையை தெரிந்து கொள்ள விசாரணை நடத்தி வரும் போலீசார், துப்பாக்கியின் வகையை குறித்து தடவியல் சோதனை செய்த பிறகு தெரிய வரும் என்று கூறுகிறார்கள்.

தொடர்புடையவை  காஷ்மீரில் தகவல் தொடர்பு தடைகள் ஏற்படுத்தும் மனநல சவால்கள்! குறுந்தொடர் 1

முகேஷின் மரணம் எதிர்பாராதவாறு நடந்து விட்டது, இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என விஜய் கூறினாலும், அவர் மீது ஏற்கெனவே கொள்ளை வழக்கு நிலுவையில் இருப்பது போலீசாருக்கு மேலும் குழப்பத்தை நீடித்துள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment