Kamal Haasan celebrates his birthday with family members !!

Kamal Haasan celebrates his birthday with family members !! 1

இன்று தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன் தனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து அன்பான வாழ்த்துக்களைப் பெற்று வருகின்றனர். கமல் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடி இருந்தார்.

கமல் தனது 65- வது பிறந்தநாளான இன்று தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொண்டாடி உள்ளார் . அதன் ஒருபகுதியாக, பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற கமல், சகோதரர் சாருஹாசனுடன் சேர்ந்து தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார்.

விளம்பரம்

அதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கொடியை ஏற்றி பின்னர் பேசிய கமல், சொந்தமண்ணில் குடும்பத்தினருடன் சேர்ந்து தந்தையின் சிலையை திறந்து வைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

கமல் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடும் புகைப்படங்கள் இப்போது வெளியாகி உள்ளது. கொண்டாட்டத்தில் அவரது சகோதரர் சாருஹாசன், மருமகள் சுஹாசினி மணிரத்னம், மகள்கள் சுருதி மற்றும் அக்ஷராஹாசன் மற்றும் நடிகை பூஜா குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  உயிர் பிரியும் நேரத்தில் மேடையில் இருந்து வெளியேறி செல்லும் KKவின் கடைசி வீடியோ | Singer KK

பரமக்குடியில் நீண்ட நாட்களுக்கு பின் கமலின் குடும்ப உறவுகள் ஒரே இடத்தில் சந்தித்தனர். அதே சமயம் இவர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தில் பூஜா குமார் இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏற்கனவே கமல்ஹாசன் – பூஜா குமார் இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. தற்போது கமல்ஹாசன் குடும்ப உறவினர்களுடன் பூஜா குமார் இருக்கும் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.பூஜா குமார் எப்போது கமலின் குடும்ப உறுப்பினர் ஆனார் என்ற கேள்விகளையும் சமூக வலைதளங்களில் சிலர் எழுப்பி வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment