நடிகர் கார்த்திக் நடித்து முடித்திருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புது வீடியோ ஒன்றை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கிறனர். இதில் கார்த்திக் டப்பிங் பேசும் வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘பையா’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். இவர் தற்போது ‘ஜப்பான்’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அனு இமானுவேல், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று மொத்தம் நான்கு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவாகி வரும் ‘ஜப்பான்’ திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் டப்பிங் பேசும் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Dream Warrior Pictures