Categories: சினிமா

ஜவான் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? 100 கோடியை கடந்து சாதனை செய்த ஜவான்.!

வெளியிட்டது

இயக்குனர் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் ஒரே நாளில் செய்த வசூல் குறித்து தற்போது படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் 100 கோடியை கடந்து மகத்தான சாதனை புரிந்திருக்கிறது ஜவான் திரைப்படம். ஹிந்தியில் முதல்முறையாக அட்லீ இயக்கிய முதல் திரைப்படம் என்பதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டுமல்லாமல் தமிழ் நடிகர்களாக இருந்த விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்ததால் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வந்தது. இந்த நிலையில் படம் நேற்று இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

ஜவான் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? 100 கோடியை கடந்து சாதனை செய்த ஜவான்.! 1

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தம் மூன்று மொழிகளில் உருவாகி இருந்த இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஷாருக்கானும் அவரது மனைவி கௌரியும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் மூலமாக அட்லீ, நயன்தாரா, யோகி பாபு, அனிருத் போன்றவர்கள் ஹிந்தி துறையில் காலெடுத்து வைத்திருந்தனர். இந்த நிலையில் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தற்போது படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது படக்குழு. அதன்படி ரூ.129. 6 கோடி வசூலை குறித்து மகத்தான சாதனை படைத்திருக்கிறது ஜவான் திரைப்படம்.

ஷாருக்கானின் நடிப்பில் கடைசியாக வெளியான பதான் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகியிருந்தது. இந்த படம் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலை கொடுத்திருந்தது. இதனால் அடுத்த படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது ஜவான் படமும் நல்ல ஓபனிங்கை கொடுத்திருக்கிறது. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். ஹிந்தியில் 75 கோடியும், தமிழில் எட்டு கோடியும் தெலுங்கில் 7 கோடியும் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒரே நாளில் 100 கோடி வசூலை கடந்திருக்கிறது ஜவான் திரைப்படம். வார இறுதி நாட்கள், விநாயகர் சதுர்த்தி ஆகியவை வர இருப்பதால் இந்த மாதத்திற்குள் வசூல் ரூ.500 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Twitter Original Source From: Red Chillies Entertainment

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்