Categories: சினிமா

‘ஜே ஜே’ படத்தில் நடித்த ப்ரியங்கா கோத்தாரியை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க

வெளியிட்டது

நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஜே ஜே’ படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக இந்த படத்தில் நடித்த பிரியங்கா கோத்தாரியை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

'ஜே ஜே' படத்தில் நடித்த ப்ரியங்கா கோத்தாரியை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க 1

இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இன்று கேட்கும் பொழுது கூட பாடல்கள் புத்துணர்ச்சி ஏற்படுத்துவதாக இருக்கிறது.

ஆனால் இந்த படத்தில் நடித்த பிரியங்கா கோத்தாரி அதன் பின்னர் என்ன ஆனார்? என்பது தெரியாமல் பலரும் இவரை தேடி வந்த நிலையில், தற்போது இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

இவரின் இயற்பெயர் நிஷா கோத்தாரி. இவர் பிறந்தது மேற்கு வங்கம் என்றாலும் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது டெல்லிக்கு குடி பெயர்ந்து விட்டார். தனது மேல்நிலைப் படிப்பையும் டெல்லியிலேயே படித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் அவர் நடித்திருந்த போதிலும் ஹீரோயினாக அவரால் தொடர்ந்து ஜொலிக்க முடியவில்லை. அதனால் ஐட்டம் பாடல்களுக்கு மட்டும் சில படங்களில் தோன்றி நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றிலும் கூட அவர் ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார்.


ஆனாலும் கூட தமிழ் படங்களில் அவர் பெரிய அளவில் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக 2009ம் ஆண்டு வெளியான ‘கார்த்திகை’ என்கிற படத்தில் நடித்திருந்தார். பின்னர் ‘கச்சேரி ஆரம்பம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

திரையுலகை விட்டு காணாமல் போயிருந்த அவரின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போய் இருக்கும் அவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா கோத்தாரியா இது? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்