இவ்வளவு பிளாப் படங்களை குடுத்துட்டு நீ சூப்பர் ஸ்டாரா? விஜயை வெளுத்து வாங்கிய கே ராஜன்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உயிருடன் இருக்கும்போதே இன்னொருவரை சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கே ராஜன் விஜய்க்கு எதிராக அதிரடியாக பேசியிருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார் விஜயை பார்த்து அடுத்த “சூப்பர் ஸ்டார்” தளபதி விஜய் தான் என்று கூறினார். இது பல தரப்புக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் உயிருடன் இருக்கும் நிலையில் இன்னொருவரை சூப்பர் ஸ்டார் ஆக எப்படி சொல்லலாம் என்று ரஜினி ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். தற்போது இது குறித்து பேசி இருக்கும் கே ராஜன் பல தகவல்களை பேசி இருக்கிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள கே.ராஜன் விஜயை கடுமையாக விமர்சித்தும் இருக்கிறார். ரஜினிகாந்த் தனது அயராத உழைப்பின் மூலமாக இந்த பட்டத்தை பெற்றார். அவர் தயாரிப்பாளர்களை தனது உழைப்பின் மூலம் காப்பாற்றிய ஒரு நடிகர் ஆவார்.

தொடர்புடையவை  உலக அளவில் கோடிகளை அள்ளிய பொன்னியின் செல்வன்.! 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இவ்வளவு பிளாப் படங்களை குடுத்துட்டு நீ சூப்பர் ஸ்டாரா? விஜயை வெளுத்து வாங்கிய கே ராஜன்.! 1
தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்தால் அதற்கு ஈடாக பணம் கொடுத்து உதவும் நல்ல குணம் உடையவர் ரஜினி. ரஜினியால் நஷ்டம் அடைந்தவர்கள் என்று பார்த்தால் இரண்டு சதவீதம் கூட கிடையாது. இப்படிப்பட்ட தாராள எண்ணம் கொண்டதால்தான் அவரை மக்கள் சூப்பர் ஸ்டாராக ஏற்றுக் கொண்டார்கள். அவர் உயிருடன் இருக்கும் போது மற்றொருவரை சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சரத்குமாரை சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். ஆனால் அவர் மேடையில் சென்று விஜயை பார்த்து சூப்பர் ஸ்டார் என்று கூறுகிறார். அவர் எப்படி அதை சொல்லலாம்? சூப்பர் ஸ்டாருக்கு பதிலாக வேறு இணையான வார்த்தையை சொல்லி புகழ்வதில் தப்பில்லை. ஆனால் சூப்பர் ஸ்டார் என்று கூறியதை தவிர்த்து இருக்கலாம். மேலும் வாரிசு இசை வெளியீட்டு விழா மேடைக்கு வந்த அவர் தனது தாய் தந்தைக்கு தான் முதலில் நன்றி சொல்லி இருக்க வேண்டும். ஆனால் விஜய் அதை கூட செய்யவில்லை.

விளம்பரம்
தொடர்புடையவை  அமரன் இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் தனுஷ்..! வெளியான பூஜை புகைப்படங்கள்..!

இவ்வளவு பிளாப் படங்களை குடுத்துட்டு நீ சூப்பர் ஸ்டாரா? விஜயை வெளுத்து வாங்கிய கே ராஜன்.! 3

அம்மா அப்பா உடன் விஜய் பேசுவதில்லை அவர்களுக்குள் பிரச்சனை என்று சொல்கிறார்கள். அப்படி என்ன பிரச்சனை? நீ சிறு வயதில் இருக்கும்போது எதுவும் தவறு செய்யவில்லையா? அதை அவர்கள் மன்னிக்கவில்லையா? நீ சிறு வயதாக இருக்கும் பொழுது உன் தந்தை எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை பெரிய ஆளாக்க பாடுபட்டார்கள் என்பது உனக்கு தெரிகிறதோ இல்லையோ? எனக்கு தெரியும். 20 படங்களுக்கு பின்பு தான் உன் முகமே வெளியில் வர ஆரம்பித்தது. காதலுக்கு மரியாதை படத்திற்கு பின்னர் தான் விஜய் ஒரு பெரிய உருவெடுத்தார். அவரது தாய் சோபா கச்சேரிகளில் பாடி கஷ்டப்பட்டு தனது மகனை பெரிய ஆளாக்கினார். ஆனால் எஸ்ஏ சந்திரசேகரின் பெயரை கூட சொல்லாமல் தவிர்த்தது ஏற்புடையதாக இல்லை. விஜயை நம்பர் ஒன் என்று சொன்னால் அவர் நடித்த எல்லா படமும் ஓடி விட்டதா? அஜித் இருவரும் சமமான நிலையில் தான் இருக்கிறார்கள். பிகில், மெர்சல், வலிமை, விவேகம் போன்ற படங்கள் எல்லாம் தோல்வி அடைந்த படங்கள் தான்.

விளம்பரம்
தொடர்புடையவை  உடல் எடை மிக மெலிந்து அடையாளமே தெரியாமல் மாறி போன கேப்டன்.! வைரலாகும் சமீபத்திய புகைப்படம்

இவ்வளவு பிளாப் படங்களை குடுத்துட்டு நீ சூப்பர் ஸ்டாரா? விஜயை வெளுத்து வாங்கிய கே ராஜன்.! 5

குறிப்பாக மெர்சல் படத்தை எடுத்த தயாரிப்பாளர் அதன் பின் அவரால் ஒரு படம் கூட எடுக்க முடியவில்லை. அவர் அந்த படத்திற்கு பின்னர் மிகவும் அடிவாங்கி விட்டார். இந்த நிலையில் நீ எப்படி நம்பர் ஒன்றாக இருக்க முடியும்?/ பிரதீப் ரங்கநாதன் ஆறு கோடியில் லவ் டுடே படத்தை எடுத்து 100 கோடி வருவாயை எடுத்திருக்கிறார். அவர்தான் இப்போதைக்கு நம்பர் 1 என்று காட்டமாக பேசியிருக்கிறார் கே ராஜன். அவரும் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Video Embed Credits: IndiaGlitz

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment