அமரன் இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் தனுஷ்..! வெளியான பூஜை புகைப்படங்கள்..!

தமிழ் தொடங்கி தற்போது தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் வரை உயர்ந்திருப்பவர் தனுஷ். இவருக்கு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. தமிழில் சிறிய நாயகனாக அறிமுகமாகி பல விமர்சனங்களை தாங்கி தன்னை தானே செதுக்கி இன்று உலக சினிமா வரை உயர்ந்து இருப்பவர் தனுஷ். பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல முகங்களை கொண்டவர் தனுஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமரன் இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் தனுஷ்..! வெளியான பூஜை புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

பவர் பாண்டி என்ற படத்தினை இயக்கி இயக்குனராக உருவெடுத்த தனுஷ், தனது 50வது படமான ராயன் படத்தையும் இவரே இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ள நிலையில், தற்போது தனுஷ் இளைஞர்களை வைத்து இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் என்ற படத்தினை அடுத்து வெளியிட தயாராகி இருக்கிறார்.இப்படத்தை தொடர்ந்து இட்லிக்கடை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அமரன் இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் தனுஷ்..! வெளியான பூஜை புகைப்படங்கள்..! 3

விளம்பரம்

தற்போது அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தனது 55வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது. இப்படத்தினை கோபுரம் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் பூஜை தற்போது நடைபெற்று உள்ளது.

தொடர்புடையவை  "என்ன தல அடிகொஞ்சம் ஓவரோ"!!"திரௌபதி முர்மு குறித்து முன்னர் பாய்ந்து விட்டு இப்பொது பம்பும் ராம் கோபால் வர்மா"!!

 

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment