வைக்கோல் போருக்குள் ஒளிந்திருந்த சூர்யா வெண்ணிலா.! கொளுத்தி விட்ட ரவுடிகள்.!

காற்றுக்கென்ன வேலி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சூர்யாவும் வெண்ணிலாவும் வைக்கோல் போருக்குள் ஒளிந்திருக்கும் நிலையில் தற்போதைய ரவுடிகள் அந்த வைக்கோல் போரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். மிகப்பெரிய கல்லூரி ஒன்றை நடத்தி வரும் சூர்யாவுக்கு அந்த கல்லூரியில் படிக்கும் வெண்ணிலா மீது காதல் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் வெண்ணிலா சூர்யாவை காதலித்து வர சூர்யா வெண்ணிலாவை வெறுத்து ஒதுக்கினார்.

வைக்கோல் போருக்குள் ஒளிந்திருந்த சூர்யா வெண்ணிலா.! கொளுத்தி விட்ட ரவுடிகள்.! 1
பின்னர் ஒரு கட்டத்தில் சூர்யாவுக்கு வெண்ணிலாவை மிகவும் பிடித்துப் போகிறது. பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலையால் வெண்ணிலா கழுத்தில் தாலியும் கட்டி விடுகிறார் சூர்யா. கதைக்களம் இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது சூர்யா வெண்ணிலா என அனைவரும் ஒரு கிராமத்திற்கு டூருக்கு செல்கின்றனர். அப்போது அங்கு ரவுடிகளுக்கும் சூர்யாவிற்கும் கை கலப்பு ஏற்படுகிறது. சூர்யாவின் காரை துரத்திக் கொண்டு ரவுடிகள் வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் அங்கு குவித்து வைக்கப்பட்டிருக்கும் வைக்கோல் போருக்குள் காரை செலுத்தி காருக்குள்ளையே வெண்ணிலாவும் சூர்யாவும் நின்று கொண்டிருக்கின்றனர். வெளியே ரவுடிகள் இருப்பதால் அவர்களால் வைக்கோல் போரில் இருந்து வெளியே வர முடியவில்லை.

விளம்பரம்
தொடர்புடையவை  பிரசவ வலியால் துடித்த பாண்டவர் இல்லம் அனு.! தாயாக மாறிய கணவன்.! அனு பகிர்ந்த அழகிய வீடியோ.!

இது பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு புறம் சோர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கதை நகராமல் அங்கேயே நின்று கொண்டிருப்பதாக பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. வைக்கோல் போருக்கு அருகில் கார் சென்ற தடத்தை ரவுடிகள் பார்த்து விடுகின்றனர். பின்னர் வைக்கோல் போருக்குள் கார் இருப்பதை பார்க்கும் ரவுடிகள் இருவரின் கதையை தீர்த்து கட்டுவதற்காக வைக்கோல் மீது பெட்ரோலை ஊற்றி நெருப்பை பற்ற வைக்கின்றனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளாகும் வெண்ணிலா மற்றும் சூர்யா இருவரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கின்றனர்.

வைக்கோல் போருக்குள் ஒளிந்திருந்த சூர்யா வெண்ணிலா.! கொளுத்தி விட்ட ரவுடிகள்.! 3
இதற்கிடையில் தீ மளமளவென பரவி விடுகிறது. பின்னர் என்ன நடக்கும்? வெண்ணிலாவை காப்பாற்றி சூர்யா வெளியே அழைத்து வருவானா? என்பதெல்லாம் தெரியவில்லை. அந்த சஸ்பென்ஸுடன் தற்போது இந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment