1999ஆம் நடிகை சிம்ரனின் தோழியாக முதல் முறை சினிமாவில் தோன்றினார் நடிகை திரிஷா. சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி பின் நாயகியாக வளர்ந்து 40 வயதை நெருங்கியும் இன்றளவும் ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கிறார் திரிஷா. 23 ஆண்டு சினிமா வாழக்கையில் இவர் அடைந்திராத உச்சமும் இல்லை, கடந்திராத தோல்விகளும் இல்லை. தென்னிந்தியா சினிமாவின் ராணி என அழைக்கப்படும் திரிஷா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என இந்தியாவின் முக்கிய சினிமா திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

2002ஆம் சூரியா, நந்தா, லைலா நடிப்பில் அமீர் இயக்குனராக அறிமுகமான “மௌனம் பேசியதே” படத்தின் மூலம் திரையில் நாயகியாக மாறினார் திரிஷா. தமிழ் நன்றாக பேச தெரிந்த நடிகை என்பதால் எளிதில் மற்ற மொழி நடிகைகளை பின்னுக்கு தள்ளி அழகு, நடிப்பு என திறமையுடன் விரைவில் முன்னணி நடிகையாக மாறினார். நடிகர் விஜய்யின் “கில்லி” படம் இவர் நட்சத்திர நாயகியாக்க, பின் தொடர்ந்து அவருடனே 5 படங்கள் நடித்தார். ஒரே காலகட்டத்தில் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் இருவருக்கும் அழகான பார்க்கப்பட்டு இருவருடனும் மாறிமாறி படங்கள் நடித்தார். இதுவரை தமிழிலுள்ள ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ். சிம்பு. விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா, விஜய் சேதுபதி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னத்தின் பிரமாண்ட கனவு படமான “பொன்னியின் செல்வன்” படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்கி எழுதிய புத்தகத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் சோழ இளவரசி “குந்தவை” கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் படம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகளிகளின் போஸ்டர் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இன்று நடிகை த்ரிஷாவின் போஸ்டர் வெளியானது. இதனை அவரும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதில் நடிகர் கார்த்தி காமெடியாக கமெண்ட் செய்துள்ளார். அப்படத்தில் வந்தியத்தேவன் பாத்திரத்தில் வரும் அவர், படத்தில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையில், “உங்களுடைய லைவ் லொகேஷன் அனுப்புங்க….உங்க அண்ணன் ஓலை ஒன்றை கொடுக்க சொல்லியுள்ளார்” என பதிவிட்டுள்ளார். அப்படத்தில் இருவரும் அதாவது வந்தியத்தேவனும், குந்தவையும் காதலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.