விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை தமிழகத்தில் பார்க்காத நபர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு மிகப் பிரபலம். இதில் குக்குகளுடன் சேர்ந்து கோமாளிகள் அடிக்கும் லூட்டிகள் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடும், தற்போது இரண்டு சீசன்கள் முடிந்த நிலையில் மூன்றாவது சீசனும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முக்கியமான கோமாளியாக வருபவர் பாலா. இவருக்கு மூன்று லட்சம் கிடைத்துள்ள வீடியோ தற்போது அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் பாலாவிற்கு இந்த மூன்று லட்சம் கிடைக்க உதவி செய்த புகழ் மற்றும் ஸ்ருதிகா விற்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..

குக் வித்து கோமாளி சீசன் மூன்றின் கடைசி போட்டி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டிவியில் அதை ஒளிபரப்பு செய்தனர். தொடர்ந்து 5 மணி நேரம் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக ஸ்ருதிகா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பெயரை அறிவித்ததும் அவர் கண் கலங்கி அழுதார், மேலும் ஸ்ருதிகாவுடன் சேர்ந்து சமைத்த கோமாளியான புகழுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் புகழ் தனக்கு வழங்கிய அந்த பணத்தை பாலாவிற்கு வழங்குவதாகவும், அவர் அந்த பணத்தை வைத்து பல குழந்தைகளை அதில் படிக்க வைப்பார் கூறினார். புகழின் இந்த செயல் பார்ப்பவர்களை நெகிழ வைத்தது. தனக்கு வழங்கப்பட்ட பணத்தை அப்படியே பாலாவிற்கு கொடுத்த அவரின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டது.

புகழ் பணத்தை வழங்கிய சில நிமிடங்களிலேயே, ஸ்ருதிகாவுடன் முதலாவது ரவுண்டில் கோமாளியாக சமைத்த பாலாவிற்கும் ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் வென்ற ஸ்ருதிகா தனக்கு கிடைத்த பணத்திலிருந்து குழந்தைகளின் படிப்பிற்காக ஒரு லட்சம் ரூபாய் தருவதாக கூறி அனைவரையும் நெகிழ வைத்தார். இந்த மூன்று லட்சம் ரூபாயையும் குழந்தைகளின் படிப்பிற்காக பாலா செலவு செய்ய இருப்பதாக நிகழ்ச்சியுடன் கூறியுள்ளார். பாலாவை பொருத்தவரை அவர் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களை வைத்து ஒரு இல்லத்தை நடத்தி வருகிறார். அங்கு 16 குழந்தைகளுக்கு மேற்பட்டவர்களை அவர் கவனித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் அவர்களின் படிப்பு செலவையும் கவனித்து வருகிறார். மேலும் சில ஆதரவற்ற முதியவர்களையும் ஒரு இல்லத்தில் வைத்து பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video…
Youtube Video Code Embed Credits: Dimple boy 1