சச்சின் பட விஜய் – ஜெனிலியா போல மாறி லண்டனில் அலப்பறை செய்யும் புகழ் பாலா.!

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு பிரபலங்களான KPY பாலாவும் புகழும் வெளிநாட்டில் சென்று அலப்பறை செய்யும் வீடியோவை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவேற்றி இருக்கின்றனர். விஜய் டிவி பல நல்ல கலைஞர்களை உருவாக்கி இருக்கிறது. சிவகார்த்திகேயன் சந்தானம் போன்ற மிகப்பெரிய கலைஞர்களை சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அனுப்பி இருக்கிறது. தற்போது கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக மிகப் பிரபலமாக இருப்பவர்கள் தான் புகழ் மற்றும் பாலா. இவர்கள் இருவருமே ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு விஜய் டிவிக்குள் நுழைந்து இன்று மிகப்பெரிய கலைஞர்களாக இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகை இல்லை. புகழைப் பொருத்தவரை அவர் ஆரம்பத்தில் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். பின்னர் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சிறிய வேடத்தில் காமெடி செய்ய தொடங்கினார். பெரும்பாலும் இவர் பெண் வேடங்களில் தான் காமெடி செய்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சச்சின் பட விஜய் - ஜெனிலியா போல மாறி லண்டனில் அலப்பறை செய்யும் புகழ் பாலா.! 1
இதனால் பல அவமானங்களை சந்தித்து வந்திருக்கிறார் புகழ். அதேபோல் பாலாவும் பல அவமானங்களை சந்தித்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அவர் ஒரு முறை பேட்டியில் கூறும் பொழுது, தான் வாய்ப்பு கேட்டு அலைந்த சமயத்தில் ஒருவர் என் முகத்தில் வெந்நீரை ஊற்றுவேன் என்றெல்லாம் கூறியதாக கூறி கலங்கி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். மூன்று சீசன்களிலும் இவர்கள் கோமாளிகளாக கலந்து கொண்டனர். தங்களது எதார்த்தமான உடல் மொழி, டைமிங்கில் அடிக்கும் காமெடி போன்றவற்றால் இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தொடர்ந்து பல ஊர்களுக்குச் சென்றும், வெளிநாடுகளுக்குச் சென்றும் இவர்கள் காமெடி நிகழ்ச்சிகளிலும், சிறப்பு விருந்தினர்களாகவும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  யோவ் எங்கயா இருக்க? இன்னும் வீட்டிற்கு வந்து சேராத பிரவுன் மணி.! செம்ம கடுப்பில் முத்து.! ப்ரோமோ இதோ

சச்சின் பட விஜய் - ஜெனிலியா போல மாறி லண்டனில் அலப்பறை செய்யும் புகழ் பாலா.! 3
தற்போது பாலாவும் புகழும் இருவரும் இணைந்து லண்டனுக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருக்கின்றனர். அங்கிருந்து அவர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர். தற்போது சச்சின் படத்தில் வரும் கண்மூடி திறக்கும் போது பாடலுக்கு இருவரும் சேர்ந்து ரீல்ஸ் செய்திருக்கின்றனர். அந்த வீடியோவை பதிவிட்டு இருக்கும் பாலா, ஜெனிலியா இல்லாத காரணத்தினால் ஜென்ம காதலன் புகழுடன் இந்த பாடலை ரீல்ஸ் செய்கிறேன் என்று காமெடியாக பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவிற்கு சிவாங்கி உட்பட பலரும் சிரிக்கும் எமோஜியை போட்டு கமெண்ட் செய்திருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment