சுதந்திர தினத்தில் தனது அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லெஜெண்ட் சரவணன்.!

சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ என்கிற மிகப்பெரிய துணிக்கடையை நடத்தி வரும் சரவணன் தற்போது சுதந்திர தின விழாவை குழந்தைகளுடன் கொண்டாட்டி தனது இரண்டாவது பட அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை அவர் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். சென்னை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு கடை தான் சரவணா ஸ்டோர்ஸ். ஆரம்பத்தில் மிகச் சிறிய கடையாக ஆரம்பித்து இன்று சென்னையின் முக்கிய அங்கமாக விளங்கிக் கொண்டிருக்கிறது சரவணா ஸ்டோர்ஸ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தில் தனது அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லெஜெண்ட் சரவணன்.! 1

விளம்பரம்

இந்த கடையின் நிறுவனராக இருப்பவர்தான் லெஜெண்ட் சரவணன். ஆரம்பத்தில் தனது கடையின் விளம்பர படங்களில் நடித்து வந்த அவருக்கு படங்களில் நடிக்கும் ஆசை வந்தது. தி லெஜெண்ட் என்கிற படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிக்க யாரும் முன் வராத காரணத்தினால் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தை உருவாக்கி அவரே அந்த படத்தை தயாரித்தும் இருந்தார். ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் பின்னர் படம் வசூலை வாரி குவித்து இருந்தது.

தொடர்புடையவை  கமல் மற்றும் சிம்பு இணைந்து மிரட்டும் THUG LIFE படத்தின் டீசர் இதோ..!

சுதந்திர தினத்தில் தனது அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லெஜெண்ட் சரவணன்.! 3
பின்னர் அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில நாட்களாக எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது சுதந்திர தினத்தன்று தனது இரண்டாவது பட அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு பரிசுகள் மற்றும் புத்தாடைகள் வழங்கிய பின்னர் நடனமாடியும் மகிழ்ந்து இருக்கிறார். மேலும் அடுத்த படத்தின் அப்டேட்டை விரைவில் வெளியிட இருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment