விபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகன்! காலில் அறுவை சிகிச்சை!!

விபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகன்! காலில் அறுவை சிகிச்சை!! 1

அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் அறிமுக நாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மஞ்சிமா மோகன். அண்மையில், இவரது நடிப்பில் தேவராட்டம் படம் வெளியானது, இருந்தாலும் இப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இப்படத்தைத் தொடர்ந்து,ஜம் ஜம் என்ற மலையாள படத்திலும், களத்தில் சந்திப்போம், வட்டம், எப்.ஐ.ஆர், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்து வருகிறாராம்.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விபத்து ஏற்பட்டது குறித்து பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பது என்னவென்றால்: கடந்த சில வாரங்களுக்கு முன்பு எனது வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. இதையடுத்து, ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. காலில் ஏற்பட்ட காயத்தால் அடுத்த ஒரு மாத காலத்திற்கு நான் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

விளம்பரம்

இதற்கு முன் சிலபேர், நீங்கள் வாழ்க்கையில், எதிர்கொண்ட கடினமான சூழ்நிலை என்ன? என்று என்னிடம் கேட்டார்கள். அதிர்ஷ்டவசமாக அப்படி ஒன்றும் இல்லை. ஆனால், கடந்த சில நாட்கள் எனக்கு எளிதானதாக இல்லை. அப்போதைய காலகட்டத்தில் எனக்கு வந்த போன்கால்ஸ் மற்றும் மெசேஜ் ஆகியவற்றிற்கு எந்தவித பதிலும் அளிக்காததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.இந்த சம்பவம், என்னை முழுவதுமாக மாற்றிவிட்டது. இதன் மூலம் நான் வலிமையான ஒருவராக உணர்கிறேன். எல்லாம் ஒரு காரணத்திற்காகவே நடக்கிறது. இதுவும் கடந்து போகும் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார்.

விளம்பரம்

Leave a Comment