மௌன ராகம் தொடரில் நடித்து வரும் ரவீனாவும் ஷில்பாவும் தற்போது சிவகார்த்திகேயன் பாடலுக்கு நடனம் ஆகியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இருவரும் ஒரே மாதிரி உடை அணிந்துகொண்டு இரட்டை சகோதரிகள் போல ஆடும் வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பலரின் மனம் கவர்ந்த தொடராக இருப்பது மௌன ராகம். இந்த தொடர் சீசன் 1 கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் தற்போது சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சீசன் 2வில் ரவீனா தாஹா, ஷில்பா, ராகுல், சல்மான் சிப்பி ரஞ்சித் என பலரும் நடித்து வருகின்றனர். இதில் சக்தியாக ரவீனாவும் கார்த்திக் கிருஷ்ணாவாக ராஜு பரமேஸ்வரன், மல்லிகாவாக சிப்பி ரஞ்சித்தும், ஸ்ருதியாக ஷில்பாவும் நடித்து வருகின்றனர். இதில் அண்ணன் தம்பிகளாக சல்மான் வருணாகவும், ராகுல் தருணாகவும் நடித்து வருகின்றனர். இந்த கதை தற்போது விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரை மக்கள் விரும்பி பார்ப்பதற்கு முக்கிய காரணம் என்றால் ஏதாவது ஒரு திருப்பம் என்றால் அதை உடனடியாக உடைத்து விட்டு கதை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்று விடும். ஒரே இடத்தில் தேய்ந்த ரெகார்ட் போன இல்லாமல் கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர். தற்போது கதைப்படி கோவிலுக்கு வைத்திருந்த நகைகளை ஸ்ருதி திருடி விடுகிறார். அதை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய சக்தி மீது மாமியார் கோபத்துடன் இருக்கிறார். இதை எப்படியாவது கண்டுபிடித்து மீண்டும் நகைகளை கோவிலில் சேர்த்து விட்டு சக்தி மீது இருக்கும் பழியை துடைத்து விட வேண்டும் என சக்தியின் கணவர் வருண் நினைத்து கொண்டிருக்கிறார். தற்போது கதைப்படி அவர் நகைகளை திருடியவரை கையும் களவுமாக பிடித்து நகைகளை மீட்டுக் கொண்டு வந்து விட்டார்.

கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது மௌன ராகம் முடிவடைய இருப்பதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் சக்தியாக நடித்து வரும் ரவீனாவும் அவரது தங்கையாக நடித்து வரும் ஷில்பாவும் ஒரே மாதிரி உடை அணிந்து கொண்டு நடனம் ஆகியிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த பலரும் நீங்கள் இருவரும் பார்ப்பதற்கு இரட்டை சகோதரிகள் போல இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் நாடகம் முடிய போகிறதே என்று நாங்கள் எல்லாம் கவலையோடு உள்ளோம் நீங்கள் ஜாலியாக ஆடிக்கொண்டிருக்கிறீர்களா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O