நயன்தாரா நடித்து வரும் பேய் படமான கனெக்ட் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. கடந்த சில மாத நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. கடந்த மாதம் 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசரை அவரது கணவர் விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது ட்ரைலரை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் நயன்தாரா இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா என்கிற படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதற்கு முன்பு மலையாள தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் வேலை பார்த்து வந்திருக்கிறார். தற்போது அவர் தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் தனது முதல் ஹிந்தி திரைப்படமான ஜவான் படத்தில் அவர் நடித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் கனெக்ட் என்கிற படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.இதில் அவருடன் இணைந்து சத்யராஜ், நடிகர் வினய், அனுபம் கேர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக தான் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை அஸ்வின் சரவணன் பேய்ப்படமாக உருவாக்கி இருக்கிறார். ஏற்கனவே மாயா என்கிற பேய் படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார் நயன்தாரா.

மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் உடன் மீண்டும் நயன்தாரா இணைந்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. இந்த படம் வருகிற 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. திகிலூட்டும் வகையில் வெளியாகியிருக்கும் அந்த ட்ரைலரை நீங்களும் காண..! Watch the below video.!
YouTube Video Code Embed Credits: Rowdy Pictures