நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் எப்படி இருக்கு.! பொது மக்கள் கூறிய விமர்சனம் இதோ.!

நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் படத்தின் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படம் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து நடத்திவரும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருந்த படம் தான் கனெக்ட். இந்த படம் இன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை மாயா, கேம் ஓவர் போன்ற படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருந்தார். ஏற்கனவே மாயா என்கிற பேய் படத்தில் நயன்தாரா நடித்திருந்தால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது. மேலும் நயன்தாராவின் பிறந்த நாளான நவம்பர் 18ஆம் தேதி படத்தின் டீசரை அவரது கணவர் விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருந்தார். டீசர், ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் எப்படி இருக்கு.! பொது மக்கள் கூறிய விமர்சனம் இதோ.! 1

விளம்பரம்

தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நயன்தாரா தொடர்ந்து பல நல்ல படங்களை கொடுத்து வருகிறார். குறிப்பாக பெண்களை மையப்படுத்தி இருக்கும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தற்போது கைவசம் பல படங்களில் நடித்து வருகிறார். 2003 ஆம் ஆண்டு மலையாள படத்தில் தனது வாழ்க்கையை தொடங்கியவர் 2005 ஆம் ஆண்டு தமிழில் ஐயா என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 75 படங்களுக்கு மேல் நடித்து முடித்துள்ளார். தற்போது அட்லீ இயக்கி வரும் ஜவான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதுவே இவரது முதல் ஹிந்தி படமாகும். மேலும் தமிழில் கைவசம் இறைவன், லேடி சூப்பர் ஸ்டார் 75 மற்றும் இன்னொரு படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். இந்த நிலையில் அவர் தனது இரண்டாவது பேய் படமான கனெக்ட் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

தொடர்புடையவை  நூற்றுக்கணக்கான நபர்களுடன் சேர்ந்து "நாட்டு நாட்டு" பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட பிரபு தேவா.!

நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் எப்படி இருக்கு.! பொது மக்கள் கூறிய விமர்சனம் இதோ.! 3

விளம்பரம்

இந்தப் படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் வினய், சத்யராஜ், பிரபல ஹிந்தி நடிகர் அனுபம் கேர் போன்றவர்கள் நடித்துள்ளனர். இந்த படம் தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியாகியிருக்கிறது. படம் பார்த்து விட்டு வெளியே வந்த பலரும் நயன்தாராவின் நடிப்பையும் படத்தையும் வெகுவாக பாராட்டினர். 90 நிமிடங்கள் எந்த இடைவெளியும் இல்லாமல் படம் வெளியாகி இருக்கிறது. படம் மிகவும் திரில்லிங்காக இருந்ததாகவும், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருந்ததாகவும், நயன்தாரா மற்றும் சத்யராஜ் நடிப்பு அருமையாக இருந்ததாகவும் பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் பிண்ணனி இசை படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது என்றும் கூறினர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: TN360

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment