நடிகை ஊர்வசி நடித்திருக்கும் 700 ஆவது திரைப்படமான அப்பத்தா என்கிற படத்தில் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. நாயுடன் போராடும் ஒரு காமெடி கலந்த ஜானரில் ஊர்வசி தற்போது நடித்திருக்கிறார். எண்பதுகளின் பிற்பகுதியில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி. 1983 ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஊர்வசிக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் பாட்டி சொல்லை தட்டாதே, தாவணிக் கனவுகள், மகளிர் மட்டு,ம் மைக்கில் மதன காமராஜன், மாயா பஜார் போன்ற பல படங்களின் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். மலையாளத்திலும் கொட்டும் குரவையும், அனுராகி, பத்முத்ரா போன்ற பல படங்களின் நடித்திருக்கிறார். இது மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார் ஊர்வசி. சமீபகாலமாக ஹீரோவிற்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், இடியட், வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன், சூரரைப் போற்று, கோஷ்டி, காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.தற்போது கைவசம் பா. ரஞ்சித் இயக்கி வரும் ஜே பேபி படத்தின் நடித்து வருகிறார். மலையாளத்தில் உள்ளோளுக்கு என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
கதாநாயகி, குணச்சித்திர நடிகை, காமெடி என்று பல வகைகளில் நடித்திருக்கும் ஊர்வசி தற்போது தனது 700 ஆவது திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு “அப்பத்தா” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஊர்வசி மட்டுமே தனி ஒரு பெண்ணாக இருந்து கதையை நகர்த்தி இருக்கிறார். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் டிரைலரில் கிராமத்தில் ஊறுகாய் விற்கும் அப்பத்தாவாக ஊர்வசி இருக்கிறார். அப்போது அவரது மகனிடம் இருந்து அவரை சிட்டிக்கு தங்களது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றனர். ஊரில் பெருமையாக பேசிக்கொண்டு தனது மகன் வீட்டுக்கு ட்ரைனில் ஏறி புறப்பட்டு செல்கிறார் ஊர்வசி.
அப்போது அவரது மகன் வளர்க்கும் நாய் ஊர்வசியை பார்த்தவுடன் துரத்துகிறது. பின்னர் மகன் தனது குடும்பத்துடன் வெளியூருக்கு செல்ல இருப்பதால் இந்த நாயை கவனித்துக் கொள்ளத்தான் ஊர்வசியை அழைத்ததாக கூறுகின்றனர். பின்னர் ஊர்வசிக்கும் நாய்க்கும் இடையே என்ன நடந்தது என்கிற கலகலப்பான காட்சிகள் நிறைந்த படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. வருகிற ஜூலை 29ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான ஜியோ சினிமாவில் இந்த படம் நேரடியாக வெளியாக இருக்கிறது. பல தசாப்தங்களாக நடித்துக் கொண்டிருக்கும் ஊர்வசியின் 700 வது திரைப்படமாக இந்த படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
YouTube Video Embed Code Credits: JioStudios