லைலாவுடன் சேர்ந்து கண்ணாலே மையா மையா பாடலுக்கு ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் தற்போது நடிகை லைலா உடன் இணைந்து நடனமாடி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இந்த பாடலுக்கு நான் எப்பொழுதுமே உங்கள் ஃபேன் என்று லைலாவை டேக் செய்திருக்கிறார். நடிகை லைலா ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். அஜித், விக்ரம், சூர்யா, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். லைலாவின் சிரிப்புக்காகவே தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. பின்னர் 2006 இல் ஈரானைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்த பிறகு நடிப்பிலிருந்து முற்றிலுமாக விலகி இருந்தார் லைலா. இந்த தம்பதிகள் கோவாவில் வசித்து வந்தனர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லைலாவுடன் சேர்ந்து கண்ணாலே மையா மையா பாடலுக்கு ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்.! 1
மகன்கள் வளர்ந்து விட்ட காரணத்தினால் மீண்டும் நடிப்புத் துறைக்கு திரும்பி இருக்கிறார் லைலா. 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இத்தனை ஆண்டு இடைவேளைக்கு பின்னர், அவரின் முதல் படமே கார்த்தியின் சர்தார் திரைப்படத்தில் கமிட்டானார். அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். பின்னர் ஆண்டு லூயிஸ் இயக்கியிருக்கும் வதந்தி இது பேபில் ஆஃப் வெலோனி என்ற வெப் சீரிஸில் ஆங்கிலோ இந்தியன் தாயாக ரூபி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த தொடரில் எஸ் ஜே சூர்யாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த சீரிஸ் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தத் தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸில் கதிராக நடித்து வரும் குமரன் தங்கராஜனும் நடித்துள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  பேசிக் கொண்டிருந்த போது திடீரென கத்திய மாணவர்கள்.! ஆத்திரமடைந்த விஜய் சேதுபதி

லைலாவுடன் சேர்ந்து கண்ணாலே மையா மையா பாடலுக்கு ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்.! 3
அதனால் லைலா உடன் அவருக்கு பழகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தற்போது லைலாவும் பிரபுதேவாவும் நடித்த அள்ளித்தந்த வானம் படத்தில் வரும் கண்ணாலே மையா மையா பாடலுக்கு குமரனும் லைலாவும் சேர்ந்து ரீல்ஸ் செய்து உள்ளனர். அதை குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நான் எப்பொழுதும் உங்களின் ரசிகன் தான். குறிப்பாக இந்த பாடலுக்கு என்று கேப்ஷன் போட்டு அந்த பாடலை வெளியிட்டு இருக்கிறார். அந்த பாடலுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த பாடலைக் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below video..!

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment