நான் என்ன துரோகம் பண்னேன் உனக்கு? ஏன் என்ன இப்படி அசிங்கப்படுத்துற? மூர்த்தியை கிழித்து தொங்கவிட்ட ஜீவா.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது மொய் வைக்கும் சம்பவத்தில் பிரச்சனை வெடித்திருக்கிறது. ஜீவா கோபத்துடன் மூர்த்தியை இந்த இடத்தை விட்டு வெளியே செல்லுங்கள், நான் என்ன உங்களுக்கு துரோகம் செய்தேன்? இனிமேல் நான் உங்களுக்கு தம்பி கிடையாது என்று கோபத்துடன் திட்டி அனுப்புகிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடந்த சில நாட்களாகவே சண்டை சச்சரவு என்று நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக மூர்த்திக்கும் அவரது தம்பி ஜீவாவிற்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்திக்கு மூன்று தம்பிகள் முதல் தம்பி ஜீவா, இரண்டாவது தம்பி கதிர், மூன்றாவது தம்பி கண்ணன். ஜீவா நன்கு படித்திருந்த போதிலும் அவர் அண்ணனுக்கு உதவி செய்யும் பொருட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையிலேயே வேலை பார்த்து வருகிறார். இரண்டாவது தம்பி கதிர் பாண்டியன் உணவகம் என்ற ஒரு மெஸ்ஸை நடத்தி வருகிறார். மூன்றாவது தம்பி கண்ணன் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நான் என்ன துரோகம் பண்னேன் உனக்கு? ஏன் என்ன இப்படி அசிங்கப்படுத்துற? மூர்த்தியை கிழித்து தொங்கவிட்ட ஜீவா.! 1
இத்தனை வருடம் அனைவருமே பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் தான் வேலை பார்த்து வந்தனர். ஆனால் சில காரணங்களால் அனைவரும் தனித்தனி வேலை செய்ய ஜீவா மட்டும் அண்ணனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையிலேயே வேலை பார்த்து வருகிறார். ஆனால் அண்ணன் மூர்த்தி ஜீவாவுக்கு தனியாக சம்பளம் என்று கொடுத்தது கிடையாது. என்ன தேவை என்றாலும் அண்ணனிடமும் அண்ணனிடமும் கேட்டு தான் பெற்றுக் கொண்டு வந்தார் ஜீவா. இதனால் தொடர்ந்து அவமானங்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக கண்ணன் வங்கி வேலைக்கு சென்று சம்பாதித்து வந்து காசை கொஞ்சமாக வீட்டில் கொடுத்துவிட்டு, மீதியை அவரே வைத்துக் கொள்கிறார். இருந்தபோதிலும் ஜீவாவிடம் சென்று உன் பங்கை நீ வீட்டிற்கு எவ்வளவு கொடுக்கிறாய் என்று கேட்டு அசிங்கப்படுத்துகிறார். ஜீவாவிற்கு தனியாக சம்பளம் இல்லை அண்ணனிடம் தான் கேட்டு பெறுவார் என்ற நிலையில் இருக்கும்போதிலும் கண்ணன் இவ்வாறு கேட்டு பிரச்சனையை கிளப்பினார்.்அன்று தொடங்கி இன்று வரை பிரச்சனை பூதாகரமாக கிளம்பி இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  ஜூலி மட்டும் தலைவர் ஆகவே கூடாது. வெறுப்பை கொட்டும் நிரூப்.. வெள்ளந்தியாய் சிரிக்கும் ஜூலி | BiggBoss Ultimate Feb26 Promo 1

நான் என்ன துரோகம் பண்னேன் உனக்கு? ஏன் என்ன இப்படி அசிங்கப்படுத்துற? மூர்த்தியை கிழித்து தொங்கவிட்ட ஜீவா.! 3

தற்போது மீனாவின் தங்கை ஸ்வேதாவின் திருமணம் நடைபெறுகிறது. ஜீவா மீனாவிடம் என் நாங்கள் என்றைக்கு தனித்தனியாக மொய் வைத்திருக்கிறோம்? அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் இணைந்து தான் மொய் வைப்போம் என்று பெருமையாக கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் மூர்த்தி, கதிர், கண்ணன் ஆகியோர் தனித்தனியாக மொய் செய்து விட்டனர். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மொய் செய்தவர்களின் பெயர் பட்டியலில் ஜீவா மீனா பெயர் இல்லை, அதை ஒருவர் மீனாவின் அப்பாவிடம் கூற, மீனாவின் அப்பா நேராக மீனாவிடம் சென்று இந்த விஷயத்தை கூறுகிறார். இதனால் கடுப்பான ஜீவா நேராக மூர்த்தியிடம் சென்று கடுமையாக சண்டை இடுகிறார். இனிமேல் நான் உங்கள் தம்பியே கிடையாது, உங்கள் வீட்டிற்கு நான் வரப்போவதுமில்லை. கதிர் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் தான் இனி உன் தம்பிகள், இப்போதே இந்த இடத்தில் இருந்து வெளியே செல்லுங்கள் என்று கோபத்துடன் கத்துகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்
தொடர்புடையவை  ஞானத்தை மிக கீழ்த்தரமாக பேசும் குணசேகரன்.! கோபத்தில் பொங்கியெழுந்த ஞானம்.! ப்ரோமோ

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment