வில்லனாக மிரட்டி எடுத்துள்ள சிம்பு.! அதிரடியாக வெளியானது “பத்து தல” படத்தின் ட்ரைலர்.! இதோ வீடியோ.!

நடிகர் சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் டீசர், பர்ஸ்ட் சிங்கிள் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது ட்ரைலர் வெளியாகி பார்வையாளர்களை அள்ளி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது வரை சுமார் 47 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இதற்கு முன்பாக அவர் நடித்த மாநகரம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. சில காலமாக இடைவெளி எடுத்திருந்த சிம்புவிற்கு மாநகரம் படம் திருப்பு முனையாக அமைந்திருந்தது. தொடர்ந்து அவர் கொரோனா குமார், பத்துதல போன்ற படங்களை கைவசம் வைத்திருந்தார். கொரோனா குமார் திரைப்படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்து வருகிறது. அந்த படத்தை சிம்பு கைவிட்டு விட்டார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வில்லனாக மிரட்டி எடுத்துள்ள சிம்பு.! அதிரடியாக வெளியானது "பத்து தல" படத்தின் ட்ரைலர்.! இதோ வீடியோ.! 1

விளம்பரம்

இந்த நிலையில் நெடுஞ்சாலை, சில்லுனு ஒரு காதல் படங்களின் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குனர் ஒப்பிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டிஜே அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஸ்டுடியோ கிரீன்ஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்தப் படம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் படத்தில் இருந்து டீசர், முதல் சிங்கிள் பாடல் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தின் முதல் சிங்கிளான “நம்ம சத்தம்” கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

தொடர்புடையவை  Beast - 2nd Single Announcement Video | Thalapathy Vijay | Sun Pictures | Nelson | Anirudh

வில்லனாக மிரட்டி எடுத்துள்ள சிம்பு.! அதிரடியாக வெளியானது "பத்து தல" படத்தின் ட்ரைலர்.! இதோ வீடியோ.! 3

விளம்பரம்

தொடர்ந்து ஏஆர் ரஹ்மான் மகன் ஏஆர் அமீன் குரலில் இரண்டாவது பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் நேற்று சென்னையில் வைத்து ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிம்பு உடல் எடையை வெகுவாக குறைத்து பழைய சிம்பு போல என்ட்ரி கொடுத்தார். விழாவின் முடிவில் ட்ரைலர் வெளியிடப்பட்டது. “இங்க எவன் ஆளனும்ன்னு நான் தான் முடிவு பண்ணுவேன்” என்ற அதிரடி வசனங்களுடன் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த வருகிற மார்ச் 30ம் தேதி தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் ட்ரைலரை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Sony Music South

விளம்பரம்

Leave a Comment