பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விற்க முடிவெடுத்த மூர்த்தி.. குட்டையை குழப்பும் மீனாவின் அப்பா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குடும்ப பாங்கான தொடர்களில் முதன்மையாக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. கூட்டுக் குடும்பத்தின் ஒற்றுமையை சொல்லும் இந்த கதையில் அண்ணன் தம்பி நான்கு பேர் இருப்பார்கள். இதில் அண்ணன் இந்த குடும்பம் உடைந்து விடக்கூடாது என்று படாத பாடுபட்டு தனது தம்பிகளை வளர்த்து வருகிறார். சிறு வயது முதலே தந்தையை இழந்த அவர், தனது தம்பிகளுக்கு தந்தை இல்லாத குறையை போக்க அவர் மிகவும் கஷ்டப்பட்டு தம்பிகளை வளர்த்து வருகிறார். பின்னர் திருமணம் ஆன பின்பு ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் சென்று விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மூன்றாவது தம்பியான கதிர் வீட்டை விட்டு வெளியேறுகிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விற்க முடிவெடுத்த மூர்த்தி.. குட்டையை குழப்பும் மீனாவின் அப்பா 1

விளம்பரம்

இதனால் மூத்த அண்ணன் மூர்த்தி மிகவும் மன வேதனை அடைகிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அவருக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டு நெஞ்சு வலி ஏற்படுகிறது. இதனால் அறுவை சிகிச்சை செய்தபின் அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரது மனைவி தனம் தான் கடையையும் வீட்டையும் கவனித்து வருகிறார். இதனால் மனமுடைந்து காணப்படும் மூர்த்தியின் இறந்த தாயார் மூர்த்தியின் கனவில் வருகிறார். அப்போது இந்த வீட்டை மாற்றினால் எல்லாம் சரியாக விடும் என்று மூர்த்தியிடம் அவர் கூறுகிறார். அடுத்த நாள் அதேபோல் ஜீவா தலையில் ஒரு ஓடு வந்து விடுகிறது. இதனால் தன் தாயார் கனவில் வந்து கூறியது சரிதான் என்று மூர்த்தி நினைக்கிறார்.

தொடர்புடையவை  Life-ல அடுத்த கட்டத்துக்கு போறேன்.! சீரியலில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்து பேசிய அர்ச்சனா.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விற்க முடிவெடுத்த மூர்த்தி.. குட்டையை குழப்பும் மீனாவின் அப்பா 3

விளம்பரம்

எனவே அந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விற்க மூர்த்தி முடிவு செய்கிறார். பல ஆண்டுகாலமாக வாழ்ந்த அந்த வீட்டை மனமில்லாமல் விற்க அந்த குடும்பமே முடிவு செய்துள்ளது. அப்போது மீனாவின் தந்தை அங்கு வந்து இந்த வீட்டை எவ்வளவு விலை கொடுக்க முடிவு செய்துள்ளீர்கள் என்று கேட்கிறார். அப்போது மூர்த்தி 70 லட்சத்திற்கு விற்க முடிவு செய்துள்ளதாக சொல்ல, அந்த வீட்டை நானே வாங்கிக் கொள்கிறேன் என்று மீனாவின் தந்தை கூறுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண…Watch the below video..

விளம்பரம்

Youtube video code embed credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment