பசங்க படத்தில் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் நடித்த கிஷோருக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. அவர் சீரியல் நடிகை ஒருவரை கரம்பிடிக்க இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தனது காதலை அறிவித்திருக்கிறார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் தான் பசங்க. இந்த படத்தை சசிகுமார் தயாரித்திருந்தார். இந்த படத்தின் மூலமாகத்தான் இயக்குனர் பாண்டிராஜ் திரை உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். மேலும் விமலும் இந்தப் படத்தின் மூலமாகத்தான் திரைத்துறைக்கு அறிமுகமானார். இப்படி பலரை திரைத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்த பசங்க படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. யதார்த்தமான இந்த படத்தில் குழந்தைகளை மையமாக வைத்தும் அவர்களுக்குள், நடக்கும் சண்டைகளை மையமாக வைத்தும் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் வெற்றிக்கு பின்னர் பசங்க 2 எடுக்கப்பட்டது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

இந்தப் படத்தில் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் கிஷோரும் ஜீவா நித்தியானந்தம் என்கிற கதாபாத்திரத்தில் ஸ்ரீராமும் நடித்திருந்தார்கள். இதில் ஸ்ரீராம் அதற்குப் பிறகு வேறு சில படங்களிலும் நடித்திருக்கிறார். கிஷோர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பசங்க படத்தில் நடித்து இருந்த கிஷோருக்கு தேசிய விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் ஆகியவை அளிக்கப்பட்டன.
தற்போது இவர் சீரியல் நடிகை ப்ரீத்தி குமார் காதலிப்பதாக வெளிப்படுத்தி இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அறிவித்திருக்கும் இவர் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். உன்னை திருமணம் செய்து கொள்ளும் நாளை எதிர்பார்த்து இருக்கிறேன். அடுத்த வருடம் நாம் இருவரும் இணைந்து நம்முடைய பிறந்த நாளை கணவன் மனைவியாக கொண்டாட இருக்கிறோம். லவ் யூ என்று பதிவிட்டு இருக்கிறார்.
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்றான ஆபீஸ் என்கிற தொடரின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ப்ரீத்தி குமார். இவர் இதன் பின்னர், லட்சுமி கல்யாணம், வள்ளி, பிரியமானவள், கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, லட்சுமி வந்தாச்சு, கோபுரங்கள் சாய்வதில்லை, வானத்தைப்போல போன்ற பல தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருடன் காதலை தற்போது கிஷோர் உறுதி செய்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக பார்த்த கிஷோருக்கு திருமணமா என்று அவரது ரசிகர்கள் கமெண்டுகளில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.