Categories: சினிமா

பத்து தல படத்தின் அடுத்த மிரட்டலான போஸ்டரை வெளியிட்ட படக்குழு.!

வெளியிட்டது

நடிகர் சிம்பு நடிக்கும் பத்து தல படத்திலிருந்து தற்போது ஒரு போஸ்டர் வெளியாகியிருக்கிறது. கௌதம் கார்த்திக் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .கௌதம் கார்த்திக் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கௌதம் கார்த்திக் பத்து தல படத்தில் நடிக்கும் கெட்டப்புடன் அந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது. நடிகர் சிம்பு மாநாடு பட வெற்றிக்குப் பிறகு பல படங்களில் கமிட்டாகியுள்ளார். அவரின் வெந்த தணிந்தது காடு படம் இன்னும் இரண்டு நாட்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்கான பிரமோஷன் பணிகளில் அவர் ஈடுபட்டு இருக்கிறார்.

பத்து தல படத்தின் அடுத்த மிரட்டலான போஸ்டரை வெளியிட்ட படக்குழு.! 1

அடுத்ததாக அவர் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கேங்ஸ்டர் ஆக சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிம்பு ஹீரோவாக கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கும் பத்து தல படத்தில் அவருக்கு எதிராக கௌதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கௌதம் கார்த்திக் பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் ஆவார். இவர் கடல் என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். பின்னர் சில படங்களில் நடித்திருந்த போதிலும் இவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே இந்த பத்து தல படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் கேங்ஸ்டர் ஆக நடிக்கும் சிம்புவுக்கும் கௌதம் கார்த்திக் இடையே பல சண்டைக் காட்சிகள் இருப்பதாக தெரிகிறது. இந்த சண்டை காட்சிகளை கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள ஒரு இடத்தில் வைத்து சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் கௌதம் கார்த்திக் இன்று 33 வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் பரிசாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. கையில் துப்பாக்கியுடன் செம கெத்தாக இருக்கும் அந்த இந்த போஸ்டரை பத்து தல படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் வெளியிட்டுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்