ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ப்ரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து தமிழ் வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருப்பவர்தான் பிரியா பவானிசங்கர். இவர் வெள்ளத்திரைக்கு வருவதற்கு முன்பாக விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்தார். யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய பிரியா பவானி சங்கருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

தமிழில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்தார். பிறகு எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து மான்ஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு பெரிய ஹிட் கொடுத்தது. மீண்டும் எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து பொம்மை படத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்போது அருண் விஜயுடன் இணைந்து யானை படத்திலும், ஜெயம் ரவியுடன் இணைந்து அகிலன் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும், தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் கைவசம் ருத்ரன், பத்து தல போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பிரியா பவானி ஷங்கர் கடந்த 10 ஆண்டுகளாக ராஜவேலு என்ற தனது கல்லூரி நண்பரை காதலித்து வருகிறார். ஆனால் 10 ஆண்டுகள் ஆன பின்பும் காதலனை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இருவரும் அடிக்கடி சுற்றுலா சென்று வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா அவ்வபோது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ப்ரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!