அம்மா உனக்கு தான் இந்த கிப்ட்.! மகள் கொடுத்த பரிசை பார்த்ததும் சிறு குழந்தை போல துள்ளி குதித்த ராதிகா.!

உலகம் எங்கிலும் வாழும் தமிழர்கள் பொங்கல் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் ராதிகா சரத்குமார் தற்போது பொங்கலை கொண்டாடி அந்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அவரது மகள் ராயான் அவருக்கு பிறந்தநாளுக்கு பரிசளித்த புடவையை கட்டிக்கொண்டு, பொங்கல் விழாவை அவர் குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார். அதை அவரது மகள் ரயான் தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழ் திரையுலகில் மனம் கவர்ந்த ஜோடிகளாக இருப்பவர்கள் ராதிகா மற்றும் சரத்குமார். ராதிகா 1978 ஆம் ஆண்டு “கிழக்கே போகும் ரயில்” என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிக்கத் தொடங்கினார். இலங்கையில் பிறந்து வளர்ந்த இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். இவரது தந்தை பிரபல நடிகர் நடிகைவேள் எம் ஆர் ராதா ஆவார். இவரது குடும்பமே கலைக் குடும்பமாக விளங்குகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அம்மா உனக்கு தான் இந்த கிப்ட்.! மகள் கொடுத்த பரிசை பார்த்ததும் சிறு குழந்தை போல துள்ளி குதித்த ராதிகா.! 1
இவர் 2001 ஆம் ஆண்டு சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். ராதிகா சரத்குமார் தம்பதிகளுக்கு ராகுல் என்கிற ஒரு மகன் இருக்கிறார். ராதிகாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி ரயான் என்கிற ஒரு மகள் இருக்கிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா தனது பேரப்பிள்ளைகளுடன் விளையாடும் வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ராதிகா வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் கலக்கி வருகிறார். ராடான் மீடியா என்கிற ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக அவர் சன் தொலைக்காட்சியில் பல தொடர்களை தயாரித்திருக்கிறார். சித்தி, அண்ணாமலை, செல்வி, வாணி ராணி, சித்தி பாகம் 2 போன்ற பல நாடகங்களை இந்த நிறுவனத்தின் மூலமாக அவர்கள் தயாரித்திருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே.! மரண மாஸாக வெளியானது "வாரிசு படத்தின் ட்ரைலர்..! | Varisu Official Trailer

அம்மா உனக்கு தான் இந்த கிப்ட்.! மகள் கொடுத்த பரிசை பார்த்ததும் சிறு குழந்தை போல துள்ளி குதித்த ராதிகா.! 3
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் ராதிகா. நேற்று அவர் பொங்கல் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவரது மகள் ரயான் தற்போது ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் பிறந்த நாளுக்காக தான் தன் அம்மாவிற்கு கிப்ட் வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த புடவையை அவர் பொங்கல் திருநாளில் கட்டி இருக்கிறார். அதை பதிவிட்டு இருக்கும் அவர் இது நான் எனது தாயின் பிறந்த நாளுக்காக பரிசளித்தது என்று அந்த வீடியோவை பகிர்ந்து அவர் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார். வீடியோவில் புடவையை பார்த்ததும் துள்ளிக் குதித்து சிறு குழந்தை போல் மகிழ்ந்திருக்கிறார் ராதிகா. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment